
கங்கை கரையில் இருந்து
சற்று தொலைவில் இருந்தது சாது பவஹாரி ஆசிரமம். இவர் தன் சகோதரர் கங்கா
திவாரியிடம், 'நம் ஆசிரமத்திற்கு துறவிகள், பிரம்மச்சாரிகளை அழைத்து
ஆன்மிகக் கூட்டம் நடத்தி பக்தியை பரப்ப வேண்டும் என்பது என் எண்ணம். அந்தக்
கூட்டத்திற்கு வருபவர்களுக்கு துறவிகள், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை நீ
செய்ய வேண்டும்' என்றார். அதற்கு அவர் அதில் தண்ணீருக்கே முதலிடம்'
என்றார் தம்பி. 'புனிதமான கங்கா நதியிடம் செல். அவளிடம் வேண்டினால் தண்ணீர்
தேவையை நிறைவேற்றுவாள்' என்றார். மலர்கள், மஞ்சள், குங்குமத்துடன்
புறப்பட்ட தம்பி, அவற்றை கங்கையிடம் சமர்ப்பித்து வேண்டினார்.
கூட்டம்
நடத்தும் நாளும் வந்தது. அனைவரும் வரத் தொடங்கினர். கங்கை எப்படியும்
வந்து நமக்கு அருள்புரிவாள் என்ற நம்பிக்கையில் இருந்தார் தம்பி. ஆனால்
வந்தவர்களில் சிலர், 'இன்னும் கங்காதேவி நம் ஆசிரமத்திற்கு வரவில்லையே...'
என கேலி செய்தனர். ஆனாலும் அவர் நம்பிக்கை இழக்கவில்லை.
ஆசிரமத்திற்கு
பின்னால் இருந்த ஓடையில் திடீரென வெள்ளம் பெருகியது. 'வந்து விட்டாள்
கங்காதேவி' என அனைவரும் ஆர்ப்பரித்தனர். அதில் புனித நீராடி ஆன்மிகக்
கூட்டத்திற்கு தயாராயினர்.
கூட்டம் சிறப்பாக நடந்தது. பின்னர் அவரவர்
ஊருக்குப் புறப்பட்டனர். கங்கையும் தன் வேகத்தை குறைத்துக் கொண்டு ஓடையாக
மாறினாள். நம்பினால்... நடக்காத அதிசயமும் நடக்கும்.