sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சுட்ட கதை

/

சுட்ட கதை

சுட்ட கதை

சுட்ட கதை


ADDED : டிச 11, 2013 02:37 PM

Google News

ADDED : டிச 11, 2013 02:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிறன் மனை நாடுபவர்களுக்கு, மனதை விட்டு என்றும் நீங்காத வடுவுடன், சூடு போடும் வகையிலான பாடம் கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக இதோ ஒரு செவிவழிக்கதை.

ராவணன் சீதையை அடைய என்ன உபாயம் என்று சிந்தித்தான். ஒரு யோசனை தோன்றியது.

ராமனைப் போல் உருமாறி, சீதை இருக்குமிடம் சென்றான். மிகவும் பிரியத்துடன் சீதை அருகில் சென்று, ''சகியே! உன் நாதன் வந்து விட்டேன், இன்னும் ஏன் கவலை?'' என்றவன், அவளருகே வந்து அணைத்துக் கொண்டான்.

சீதையும் அவனை அணைத்தவாறு புன்னகை புரிந்தாள். ராவணன் திகைத்தான். 'எந்தச்சூழலிலும் ராமன் யார், மற்றவர்கள் யார் என்று கண்டு பிடித்து விடும் இவளா இப்படி!' என்று யோசித்த வேளையில், அவள் உடலில் இருந்து துர்நாற்றம் வீசியது.

''ஆகா! இவள் சீதையல்ல! தூரத்தில் நின்றாலே, அவளது உடலிலிருந்து சுகந்த வாசனை அல்லவா வீசும்! இது துர்நாற்றமாயிருக்கிறதே!''

அவன் அவளை உதறிவிட்டு, தன் உருவத்தை வரவழைத்துக் கொண்டு ''யார் நீ?'' என்றான்.

அவளும் உருமாறினாள்.

அப்போது அங்கு நின்றது சூர்ப்பனகை.

''அண்ணா! நீயா! நான் ராமனை அடையும் ஆசையில், சீதையைப் போல், என் உருவத்தை மாற்றிக்கொண்டு இங்கு நின்றேன்! உன்னை ராமன் என நினைத்து நெருங்கினேன்,' ' என்று அவமானத்தால் தலை குனிந்து சொன்னாள்.

- எல். மகாதேவன்






      Dinamalar
      Follow us