sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

அரக்கனிடம் இரக்கம்

/

அரக்கனிடம் இரக்கம்

அரக்கனிடம் இரக்கம்

அரக்கனிடம் இரக்கம்


ADDED : டிச 11, 2013 02:36 PM

Google News

ADDED : டிச 11, 2013 02:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கன் ஒருவன் தினமும் ஒருவரைப் பிடித்து உண்ணும் பழக்கம் கொண்டிருந்தான்.

ஒருமுறை, ஒரு அந்தணரின் குடும்பத்தினர் அவனிடம் சிக்கிக் கொண்டனர். அரக்கன் அவர்களிடம், ''உங்களில் ஒருவர் எனக்கு இரையாக வேண்டும்,'' என்றான்.

அந்தணர் அவனிடம், ''என் மனைவி நோயாளி. அவளைத் தின்றால் அவளது நோய் உன்னையும் பற்றும். நான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளேன். மூத்த மகன் மேல் எனக்கு பாசம். இளையவன் மேல் என் மனைவிக்கு

பாசம். அதனால், நடுவிலுள்ள மகனை எடுத்துக் கொள்,'' என்றார்.

அரக்கனும் சம்மதித்தான்.

அந்த மகனை அவன் தன்னருகே இழுத்த போது, அவன் சிரித்தான், பிறகு அழுதான்.

''ஏனப்பா! முதலில் சிரித்தாய், பிறகு அழுகிறாய்?

எதற்காக அப்படி செய் தாய்?'' என்றான் அரக்கன்.

''அரக்கனே! மனிதர்களை உண்பது ராட்சதர்களுக்கு இயல்பு. அதில் தவறில்லை. ஆனால், பெற்ற பிள்ளை என்றும் பாராமல், என்னை உனக்கு உணவாக்க முனைந்த இந்த பெற்றோரை எண்ணினேன். யார் ராட்சதர் என்று சந்தேகம் வந்துவிட்டது. அதனால் சிரித்தேன். இருப்பினும், பெற்றவர்களை பிரியப்போகிறோமே என்ற வேதனையால் அழுதேன்,'' என்றான்.

இந்த விளக்கம் கேட்டு அரக்கனே இரங்கி விட்டான். அவனை விடுவித்தான்.






      Dinamalar
      Follow us