sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

பிள்ளைக்கு தந்தை ஒருவன்! நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்!

/

பிள்ளைக்கு தந்தை ஒருவன்! நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்!

பிள்ளைக்கு தந்தை ஒருவன்! நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்!

பிள்ளைக்கு தந்தை ஒருவன்! நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்!


ADDED : மார் 02, 2018 11:02 AM

Google News

ADDED : மார் 02, 2018 11:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* குடும்பத்தின் தலைவனாக தந்தை இருப்பது போல, கடவுள் எல்லோருக்கும் தந்தையாக இருக்கிறார். நாம் அனைவரும் உடன் பிறந்தவர்கள்.

* சமுதாயத்தின் அடிப்படை குடும்பம். வீடு குழந்தையின் முதல் பள்ளிக்கூடம். பெற்றோரே ஆசிரியர்கள்.

* சிறு வயதில் மனதில் உருவாகும் கருத்தும், நடக்கும் சம்பவமும் வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

* பெற்றோருக்கும், பிள்ளைக்கும் உள்ள உறவு தெய்வீகமானது. 'அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்' என்பதை கற்று கொடுக்க வேண்டும்.

* தலைமுறை இடைவெளி காரணமாக குடும்பத்தில் பிணைப்பும், அன்பும் குறைய அனுமதிப்பது கூடாது. அன்பே குடும்பத்தின் அஸ்திவாரம்.

* குழந்தை வளர்ப்பு ஒரு கலை. குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ளவர்களாக பிள்ளைகள் விளங்க, பெற்றோர் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

* குழந்தைகளுக்காக பெற்றோர் தினமும் சிறிது நேரம் செலவிடுவது அவசியம். இதனால் குழந்தைகளின் மனம் ஆரோக்கியமாக இருக்கும்.

* நாளைய பொழுது நலமாக அமைய விரும்பினால், கண் முன் இருக்கும் இன்றைய கடமையை சரிவர செய்யுங்கள்.

* நேற்றைய இளைஞர்கள் இன்றைய முதியவர்கள். இன்றைய இளைஞர்கள் நாளைய முதியவர்கள். இந்த உண்மையை உணர்ந்தால் பெரியவர்களை மதிக்கும் பண்பு உருவாகும்.

* மரியாதை என்பது தானாக கிடைக்க வேண்டியதே தவிர, கேட்டு பெறுவது அல்ல.

* உடலில் ஆரோக்கியம், மனதில் துணிச்சல் நிறைந்த இளமைக் காலமே, லட்சியம் நோக்கிய வெற்றி பயணத்திற்கு ஏற்றது.

* வாழ்வில் குறுக்கிடும் பிரச்னைகளைக் கண்டு கலங்க வேண்டாம். பிரச்னைகள் உந்துசக்தியாக இருந்து, நம் வளர்ச்சிக்கு துணை செய்கின்றன.

* தகுதி, திறமை இரண்டையும் கல்வி மூலம் வளர்த்து கொண்டால், முன்னேற்றத்திற்கான கதவுகள் திறப்பதைக் காண்பீர்கள்.

* அறிவாளிகள் பணத்தை புறக்கணிப்பது இல்லை. அதற்காக பணம் ஒன்றே வாழ்க்கை என்ற முட்டாள் தனத்தையும் ஏற்பது கூடாது.

* மேலைநாட்டு மோகத்தால் பண்பாட்டை மறந்து விட்டோம். நாகரிகம் என்ற பெயரால் ஆடம்பரமாக வாழ்வதே மகிழ்ச்சி என கருதும் போக்கு வந்து விட்டது.

* இந்திய பண்பாட்டை காப்பது நம் கடமை. பிற நாட்டவரிடம் உள்ள நல்ல விஷயங்களை ஏற்கவும் தயங்க கூடாது.

* மனிதன் தனித்தன்மையை இழப்பது நல்லதல்ல. இதையே 'நீ நீயாகவே இரு' என்று முன்னோர் சொல்லி வைத்தனர்.

* நேர்மையும், விடாமுயற்சியும் மனிதனுக்கு அவசியம். செய்யும் தவறுகளால் எதிர்காலம் கேள்வியாகும் என்ற தெளிவு இருந்தால் தவறுகள் நேர்வதில்லை.

* தீயபழக்கம் முதலில் ஒட்டடை நுால் போல ஆரம்பிக்கும். ஆனால், முடிவில் வடக்கயிறு போல கடினமாகி விடும்.

சொல்கிறார் ஹர்ஷானந்தர்






      Dinamalar
      Follow us