ADDED : டிச 11, 2022 08:43 AM

* உன்னிடம் தீவிர நம்பிக்கை இருந்தால், நீ தேடுவது கிடைத்தே தீரும்.
* நீ செய்யும் வழிபாடு ஒருநாள் நிச்சயம் பலன் தரும்.
* ஆசையை அகற்றி உன் கடமையை செய்.
* முற்பிறவியில் நீ நடந்து கொண்டதற்கு ஏற்பவே, இந்தப்பிறவியில் எல்லாம் நடக்கிறது.
* பலன் கருதாமல் செய்யும் வேலையே உயர்வானது.
* அறிவு பலவீனமானது. நம்பிக்கை பலமானது.
* ஈரமுள்ள குச்சி தீப்பற்றாது. அதுபோல் ஆசை உள்ளவனுக்கு கடவுள் அருள் கிடைக்காது.
* நல்லவர்களுடன் பழகு. மனதில் நல்ல எண்ணம் உருவாகும்.
* பெண்கள் அனைவருமே அன்னை பராசக்தியின் அம்சம்.
* கடவுளின் அருள் இருந்தால் மட்டுமே, ஒருவர் அறியாமையில் இருந்து விடுபட முடியும்.
* தியானம் எளிதில் கைகூட உருவ வழிபாடு உதவும்.
* அமைதியாக இருப்பதே ஞானத்தின் முதல் அடையாளம்.
* எந்த நிலையிலும் கலங்காதவனே உண்மையான ஞானி.
* பொய் இருக்கும் இடத்தில் தீமைகள் இருக்கும்.
* பக்தி மார்க்கமே கடவுளை அடைய எளிய வழி.
* கடவுளை ஆராய்ச்சி செய்யாதே. அவர் திருவடியில் சரணடைந்து விடு.
* பசுவைத் தேடும் கன்று போல, கடவுளை காண மனம் ஏங்க வேண்டும்
* கற்பக விருட்சம் போல வாரி வழங்கும் வள்ளலே கடவுள்.
* ஒரு விஷயத்தை கேட்பதை விட நேரே காண்பது சிறப்பு.
* நல்லவர்களின் சேர்க்கையால் மனம் செம்மை பெறும்.
ஊக்கப்படுத்துகிறார் ராமகிருஷ்ணர்
