தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/நலமான வாழ்விற்கு....

நலமான வாழ்விற்கு....

நலமான வாழ்விற்கு....


ADDED : டிச 11, 2022 08:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2022 08:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவ.23 - பிறந்த நாள்

* உனது நாக்கை கட்டுப்படுத்தினால் வாழ்வு நலமாகும்.

* உன்னிடம் பேராசை இல்லையென்றால் சுதந்திரப் பறவையாக வாழலாம்.

* பொருள் இல்லாதவன் ஏழை அல்ல. பேராசை உள்ளவனே உண்மையான ஏழை.

* பிறருக்கு அறிவுரை வழங்குவதைவிட, பயனுள்ள செயலில் ஈடுபடு.

* வாழ்வில் குறுக்கிடும் பிரச்னைகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்.

* கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் மனித சமுதாயம் விலங்குகளின் காடாக மாறி விடும்.

* நல்லதை பார்க்கவும், செய்யவும் விரும்புங்கள்.

* மனிதனையும், கடவுளையும் இணைக்கும் பாலமே வழிபாடு.

* தங்கத்தின் மூலம் பல அணிகலன் செய்யலாம். அதுபோல் பல கடவுள் இருந்தாலும் உணர்த்தும் தத்துவம் ஒன்றே.

* கடவுளுடன் பேசுவது வழிபாடு. கடவுள் பேசுவதைக் கேட்பது தியானம்.

* மனதில் ஆன்மிக சிந்தனை அதிகரித்தால் கவலை மறையும்.

* கடவுளின் படைப்பு ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.

* பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அதையே நாமும் பிறருக்கு செய்ய வேண்டும்.

* மனதில் ஆசை எழுந்தால் அது நியாயமானதுதானா என்று யோசி.

* உணவை வீணாக்காதே... அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

* சொல்வது யாருக்கும் எளிது. ஆனால் வாக்களித்த படி நடப்பது கடினம்.

* அன்பே சிறந்த முதலீடு. அதை எவ்வளவு முதலீடு செய்கிறோமோ அந்த அளவிற்கு நல்லது.

* தண்ணீர் குளிர்ச்சியை இயல்பாக கொண்டிக்கும். அதுபோல மனிதனுக்கு அன்பே இயற்கையானது.

நல்வழி காட்டுகிறார் சாய்பாபா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us