ADDED : செப் 01, 2017 09:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செப்.8 சிவானந்தர் பிறந்த நாள்
* பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து எண்ணம், சொல், செயலால் உண்மையை கடைபிடிப்பவனுக்கு வாக்குசித்தி உண்டாகும். அவன் சொன்னதெல்லாம் பலிக்கும்.
* அன்பு மிக்க தாய், தந்தையாக கடவுள் இருக்கிறார். அவரே நம்மை விட்டு அகலாத, உயிர் தோழனாகவும் இருக்கிறார்.
* வழிப்போக்கனைப் போல, உலகில் வாழ்ந்தால் ஆசைகள் குறையும். ஆசை இல்லாவிட்டால் கடவுளை எளிதாக அடையலாம்.
* நல்லொழுக்கம், மன அடக்கம், இரக்கம், மக்கள் சேவை போன்ற உயர்ந்த பண்புகளுடன் வாழ்வதே தெய்வீக வாழ்வாகும்.
* பழி வாங்கும் எண்ணம் வேண்டாம். பகைவரையும் நேசியுங்கள். அன்பே பகை வெல்லும் ஆயுதம்.
* வாழ்க்கையில் எளிமையை பின்பற்றுங்கள். குறிக்கோளில் உயர்ந்த சிந்தனை கொண்டவராக இருங்கள்.
சொல்கிறார் இமயஜோதி