ADDED : செப் 22, 2017 10:16 AM

* கல்வி கற்றவனுக்கு எந்த நாடும் சொந்த நாடாகி விடும். எந்த ஊரும் சொந்த ஊராக மாறும். இந்நிலையில், மனிதர்கள் உயிர் பிரியும் வரை படிக்காமல் இருப்பது ஏனோ தெரியவில்லை.
* படிக்க வேண்டியவற்றை சந்தேகம் இன்றி தெளிவாக கற்க வேண்டும். கற்ற நல்ல விஷயங்களை வாழ்வில் பின்பற்றி நடக்க வேண்டும்.
* எண், எழுத்து இரண்டும் கண் போன்றவை. கல்வி கற்றவனே கண்கள் பெற்றவன். வாய்ப்பிருந்தும் படிக்காதவன், முகத்தில் இரு புண்கள் கொண்டவனே.
* கற்றவர் ஒருவரை ஒருவர் சந்தித்தால், 'இனி இவரை என்று காண்போமோ?' என வருந்துவர். இதுவே கல்வி கற்றவரின் குணமாகும்.
* ஆசிரியரிடம் மாணவன் பணிவாக பாடம் கற்க வேண்டும்.
* தோண்டும் அளவிற்கு ஏற்ப கிணற்றில் நீர் சுரப்பது போல, மனிதன் எந்த அளவுக்கு கற்கிறானோ அந்த அளவுக்கு அறிவாளியாக திகழ்வான்.
* ஒரு பிறவியில் கற்ற கல்வியின் பயன், ஏழேழு பிறவிக்கும் நம்மைத் தொடர்ந்து வந்து துணை நிற்கும்.
தெளிவுபடுத்துகிறார் திருவள்ளுவர்