
செப். 27 - மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள்
* எல்லாம் கடவுள் செயல் என சும்மா இருப்பது கூடாது. அறிவை நல்வழியில் பயன்படுத்தி வேலையில் ஈடுபட வேண்டும். வேகம், விவேகம் இரண்டும் வெற்றிக்கு அவசியமானவை.
* கோயிலில் மட்டும் கடவுளைக் காண்பதில் பயனில்லை. எல்லா உயிர்களிடமும் அவர் இருப்பதை உணர்வதே பக்தி.
* விதை, மண்ணைப் பற்றிக் கொண்டு தன்னை நிலை நிறுத்துவது போல, நம்பிக்கையுடன் கடவுளைப் பற்றிக் கொண்டால் வாழ்வு நலம் பெறும்.
* இழந்த பணத்தைக் கூட சம்பாதிக்கலாம். ஆனால், இழந்த காலத்தை மீண்டும் பெற முடியாது.
* கடவுள் இல்லை என மறுப்பது,''பேச்சுக்கு ஆதாரமான நாக்கைக் கொண்டே எனக்கு நாக்கு இல்லை'' என கூறுவது போலாகும்.
* சுயநல எண்ணத்துடன் பக்தி செலுத்துபவரைக் கண்டால் கடவுள் ஆயிரம் அடி விலகிச் செல்வார்.
* கிணற்றில் விழ ஒரு நிமிடம் போதும். ஆனால், மீண்டும் எழுந்து வர போராட வேண்டியிருக்கும். இதுவே ஆக்கத்திற்கும், அழிவிற்கும் உள்ள வேறுபாடு.
சொல்கிறார் மாதா அமிர்தானந்தமயி