
காலம் என்பது கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தி. அது நம்மை இயக்குகிறது. காலம் சரியாக இருந்தால் எல்லாமே சரியாக அமையும். இல்லாவிட்டால் வாழ்வு அதோகதி தான். இப்படி வருந்துவோரை கரை சேர்க்கிறார் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் செல்வ முத்துக்குமாரசுவாமி. அவரை வழிபட்டால் 'காலம் உங்கள் கையில்' இருப்பதை காண்பீர்கள்.
கோயிலுக்குள் நுழைந்ததும் செல்வ கணபதியை தரிசிக்கலாம். பின்னர் வள்ளி, தெய்வானையோடு இருக்கும் முருகப்பெருமானை வணங்கலாம். மறைபொருளாக அவர் சொல்லும் செய்தி ஒன்று தான். என்ன என்று கேட்கிறீர்களா... 'கடமையை செய். உன்னை காப்பது என் பொறுப்பு' என்ற பாசிடிவ் சிந்தனையை மனதில் விதைப்பார். அதன் பின் கடமையைச் செய்வதில் தானே ஆனந்தம் என செயல்படுவீர்கள்.
மாதம்தோறும் வரும் கார்த்திகையன்று விரதம் இருந்து தரிசித்தால் உடல்பலம், மனநலம் பெருகும். 1984ல் கோயில் நிர்மாணிக்கப்பட்டு 1995ல் காஞ்சி மஹாபெரியவரின் ஆசியுடன்,
ெஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் கும்பாபிேஷகம் நடந்தது. பின் பலகோடி முறை 'நமச்சிவாய' மந்திரம் ஜபிக்கப்பட்டு கோடையில் குளிர் தந்த ஈஸ்வரர், சிவகாமி அம்மனின் சிலைகள் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
பிரதோஷத்தன்று பன்னீர் திராட்சை அபிேஷகம் செய்தால் நோய்கள் நீங்கும். ஆயுள், ஆரோக்கியமுடன் வாழ்வீர்கள்.
எப்படி செல்வது: செங்கல்பட்டு - சென்னை செல்லும் வழியில் 16 கி.மீ.,
விசேஷ நாள்: கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்.
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 96771 33514
அருகிலுள்ள கோயில்: திருப்போரூர் கந்தசுவாமி 30 கி.மீ., (செவ்வாய் தோஷம் தீர...)
நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 044 - 2744 6226