sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

பாட்டு கேட்போமா...

/

பாட்டு கேட்போமா...

பாட்டு கேட்போமா...

பாட்டு கேட்போமா...


ADDED : மார் 14, 2025 09:01 AM

Google News

ADDED : மார் 14, 2025 09:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம் பழஞ்சிறைதேவி கோயிலில் பாடும் தோற்றப் பாட்டைக் கேட்டால் பாவம் தீரும். விருப்பம் நிறைவேறும்.

திருவனந்தபுரம் ஒரு காலத்தில் காடாக இருந்தது. இதை 'அனந்தன் காடு' என்பர். இங்குள்ள நீலாற்றங்கரையில் தேவியின் தரிசனம் பெற வேண்டி தவமிருந்தார் யோகீஸ்வரர் என்னும் முனிவர். அவருக்கு காட்சியளித்த தேவி, ''இங்கு என்னை பிரதிஷ்டை செய்து வழிபடுவாய்'' என சொல்லி மறைந்தாள். தேவி காட்சியளித்த கோலத்திலேயே சிலை வடித்து வடக்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார் முனிவர்.

பிற்காலத்தில் இக்காடு அழிக்கப்பட்டு சிறைச்சாலை கட்டப்பட்டதால் 'பழஞ்சிறை' எனப் பெயர் வந்தது. இங்கு அருள்புரியும் அம்பிகை பழஞ்சிறை தேவி எனப் பெயர் பெற்றாள். நினைத்தது நிறைவேற தேவிக்கு புடவை, செவ்வரளிப்பூக்கள் அணிவித்து வெடி வழிபாடு செய்கின்றனர். கொடுங்கல்லுார் தேவியின் அம்சமாக பழஞ்சிறைதேவி கருதப்படுகிறாள். கோயில் கட்டிய முனிவர் யோகீஸ்வரரின் சிலை அம்மனின் முன்புறத்தில் உள்ளது. இவரை வழிபட்டு திருநீறு பூசினால் 'பாலாரிஷ்டம்' என்னும் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் அகலும்.

இங்கு மாசிமாதம் மிருகசீரிட நட்சத்திரத்தன்று திருவிழா தொடங்கும். 41 நாள் விரதமிருந்த பக்தர்கள் அப்போது 'தோற்றப்பாட்டு' என்னும் பாடலை இசையுடன் பாடுவர். தேவி அவதரித்த வைபவம், அருள்புரியும் விதம் பற்றி வர்ணிப்பர். இதைக் கேட்டால் கிரக தோஷம், முன்வினைப்பாவம் மறையும்.

மாசித் திருவிழாவின் ஆறாம்நாள் இரவில் நடக்கும் அத்தாழ பூஜையின் போது பெண் குழந்தைகளை தேவி போல வேடமிட்டு பூஜை செய்வர். இதனால் அவர்களுக்கு நல்ல மணவாழ்வு கிடைக்கும். அப்போது சுமங்கலிகள் தாலி பாக்கியத்திற்காக இங்கு மாங்கல்யபூஜை நடத்துவர். அதன்பின் நள்ளிரவில் நடக்கும் 'ஸ்ரீபூதபலி' என்னும் பூதகணங்களுக்கு பலியிடும் நிகழ்ச்சி நடக்கும். தேவியின் சிலம்பு, திரிசூலம், வாள், பட்டு வஸ்திரத்தை அணிந்தபடி பூஜாரி இதில் பங்கேற்பார். நவக்கிரகம், ரக்த சாமுண்டி, பிரம்ம ராட்சஸ், மாடன், தம்புரான் சன்னதிகளும் உள்ளன. 17 யானைகள், ஆறு சிங்க சிலைகள் கருவறையை சுமக்கின்றன. கருவறையின் மீது மும்மூர்த்திகள், மூன்று தேவியர், கங்கையுடன் கூடிய சிவன் சிலைகள் உள்ளன. பிரகாரத்தில் தசாவதார சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

கோயிலின் வெளியே 'சர்ப்பக்காவு' என்னும் வனப்பகுதியில் நாகராஜர் சன்னதி உள்ளது. இவருக்கு அபிஷேகம் செய்து வழிபட கண், தோல் சம்பந்தமான நோய் விலகும். ராகு, கேது தோஷம் தீரும்.

எப்படி செல்வது: கிழக்குக் கோட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவளம் ரோட்டில் 5 கி.மீ.,

விசேஷ நாள்: மாசித்திருவிழா, புரட்டாசி நவராத்திரி

நேரம்: அதிகாலை 5:30 - 10:30 மணி; மாலை 5:00 - 8:30 மணி

தொடர்புக்கு: 94474 00300, 0471- 246 1037

அருகிலுள்ள கோயில் : திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி 4 கி.மீ., (நலமுடன் வாழ...)

நேரம்: அதிகாலை 4:15 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 0471 - 245 0233






      Dinamalar
      Follow us