sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

கண்ணமங்கை தாயே கருணை செய் நீயே...

/

கண்ணமங்கை தாயே கருணை செய் நீயே...

கண்ணமங்கை தாயே கருணை செய் நீயே...

கண்ணமங்கை தாயே கருணை செய் நீயே...


ADDED : நவ 10, 2023 10:28 AM

Google News

ADDED : நவ 10, 2023 10:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகம் புரக்கும் பெருமான்றான்

உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி

உவகை அளிக்கும் பேரின்ப

உருவே எல்லாம் உடையாளே!

திலகம் செறிவான நுதற்கரும்பே

தேனே கனிந்த செழுங்கனியே

தெவிட்டாது அன்பர் உள்ளதுள்ளே

தித்தித்து எழுமோர் தெள்ளமுதே

மலகஞ் சுகத்தேற்கு அருளளித்த

வாழ்வே என்கண் மணியேஎன்

வருத்தம் தவிர்க்க வரும் குருவாம்

வடிவே ஞான மணி விளக்கே

சலகம் தரம்போற் கருணை பொழி

தடங்கண் திருவே கண்ண மங்கைத்

தாயே சரணம் சரணமிது

தருணம் கருணை தருவாயே.

பன்னிரு ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலங்களை நுாற்றி எட்டு திவ்ய தேசங்கள் என்பர். ஆழ்வார்களின் பாடல்களை இவ்வுலகிற்கு தேடி தொகுத்துக் கொடுத்தவர் நாத முனிகள். இவருடைய சீடர்களில் ஒருவர் தான் கண்ண மங்கையாண்டான். இவர் இங்குள்ள பெருமாளுக்கு மாலை தொடுத்து கொடுக்கும் தொண்டினை செய்து வந்தார்.

ஆரண்யம்,நதி,நகரம், தலமகிமை, விமானம், மண்டபம், தீர்த்தம் என ஏழினையும் கொண்டதை சப்த புண்ணிய சேத்திரம் என்பர். திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை தலம் இத்தகைய பெருமையினை கொண்டது. பல காலம் லட்சுமி தாயார் தவம் செய்து பெருமாளை திருமணம் செய்து கொண்ட தலம். இது பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்று. நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனின் சாபம் தீர்ந்த தலம். தேனீக்கள் வடிவம் எடுத்து இன்றும் வானவர்கள் பெருமாளையும், தாயாரையும் வழிபாடு செய்கின்றனர். இத்தல தாயாரின் மீது பாடல் பெற்ற தோத்திரம் இது. மனம் ஊன்றி படியுங்கள். மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.






      Dinamalar
      Follow us