sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நமக்கு முதல் கடவுள் தாயும் தந்தையும்

/

நமக்கு முதல் கடவுள் தாயும் தந்தையும்

நமக்கு முதல் கடவுள் தாயும் தந்தையும்

நமக்கு முதல் கடவுள் தாயும் தந்தையும்


ADDED : நவ 10, 2023 10:30 AM

Google News

ADDED : நவ 10, 2023 10:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தாயும் தந்தையும் நமக்கு முதல் கடவுள்.

* சிந்தித்து பொறுமையாக செயல்பட்டால் உலகம் உன் கையில்.

* நீரின்றி அமையாது உலகு. நீர்வளம் உள்ள ஊரில் வாழ்தலே சிறப்பு.

* மிகச்சிறிய செயலாக இருந்தாலும் ஆராய்ந்து பார்த்து செய்வதே நல்லது.

* மனசாட்சியை புறக்கணிப்பதை விட பெரிய வஞ்சகம் வேறு ஒன்றுமில்லை.

* துன்பம் வரும் போதும் மனம் தளராமல் ஊக்கத்துடன் செயல்பட்டால் வெல்வது உறுதி.

* இல்லற வாழ்வே நல்லறமாகும். இல்லற வாழ்வை விட்டு விலகுவது சிறந்ததல்ல.

* பிறருக்கு கொடுத்து வாழாதவர் பல காலம் வாழ்ந்தாலும் அது அர்த்தமற்றதாகும்.

* அளவோடு உண்கிறவர்களுக்கு அழகு நீடிக்கும்.

* பெற்றோரின் குறிப்பறிந்து செயல்படும் குழந்தைகள் அமிர்தம் போன்றவர்கள்.

* வறுமையிலும் தவறான செயலில் ஈடுபடாதே.

* முயற்சி செய்தும் கிடைக்காத பொருளை உடனே மறந்து விடு.

* குற்றம் சொல்லிக்கொண்டு இருப்பவர்களுக்கு யாருடைய ஆதரவும் கிடைக்காது.

* எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் தற்பெருமையாக பேசக்கூடாது.

* இன்பத்திலும் துன்பத்திலும் பிரியாது இருப்பதே உண்மையான உறவுக்கு அடித்தளம்.

* சூதாடுவதும், தேவையில்லாத வாக்குவாதமும் தீராத துன்பத்தை தரும்.

என்கிறார் அவ்வையார்






      Dinamalar
      Follow us