sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நீயும் தெய்வமாகலாம்

/

நீயும் தெய்வமாகலாம்

நீயும் தெய்வமாகலாம்

நீயும் தெய்வமாகலாம்


ADDED : நவ 10, 2023 10:30 AM

Google News

ADDED : நவ 10, 2023 10:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பணிவும் எளிய வாழ்க்கையும் இருந்தால் நீயும் தெய்வமாக மாறலாம்.

* மனத்துாய்மை எவ்வளவு வேகமாக அதிகரிக்கிறதோ, அவ்வளவு வேகமாக நீ கடவுளை அடைவாய்.

* இரக்கம், தன்னடக்கம், வாய்மை, நேர்மை, துாய்மை, கற்புடைமை, தவம் ஆகியவை ஆன்மிக வாழ்வின் முதுகெலும்பாகும்.

* உனது கொள்கைகளுக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக இரு. அப்பொழுது தான் ஆன்மிகத்தில் வெற்றியடைய முடியும்.

* கருணையே உயர்வான குணம், குற்றத்தை மன்னிப்பதே மகத்தான சக்தி, ஆன்மிகமே மேலான பொருள்.

* மன அமைதியை கொண்டவரிடத்தில் ஆனந்தம் குடி கொண்டிருக்கும்.

* சந்தனக்கட்டை மணம் வீசுவதுபோல் நல்ல குணம் கொண்டவர்கள் வாழும் குடும்பம் கோயிலுக்கு நிகராகும்.

* சத்தியம், நியாயம், விவேகம் ஆகிய மூன்றையும் மூச்சாக கொண்டவரிடம் அமைதி, சக்தி, சந்தோஷம் தானாக உயரும்.

* நடைமுறையில் ஆன்மிக கட்டுப்பாடு இருந்தால் தான் வாழ்க்கையில் லட்சியத்தை அடைய முடியும்.

* செயலும் அதற்கான வினையும், சமமாகவும் எதிராகவும் இருக்கின்றன. எனவே யாருக்கும் தீங்கு செய்ய நினைக்காதே.

* உலகமாகிய பெருங்கடலை தாண்டிச் செல்ல இரண்டே வழிகள் தான் உள்ளன. ஒன்று நல்லவர் நட்பு, மற்றொன்று நல்ல நுால்கள்.

என்கிறார் சிவானந்தர்






      Dinamalar
      Follow us