sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

சனாதன தர்மம் - 14

/

சனாதன தர்மம் - 14

சனாதன தர்மம் - 14

சனாதன தர்மம் - 14


ADDED : ஜன 12, 2024 04:10 PM

Google News

ADDED : ஜன 12, 2024 04:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வண்ணக்கோலங்கள்

கோலம் என்பதற்கு அழகு என்பது மட்டும் அல்ல. அமைப்பு, ஒழுங்கு, வரிசை, வண்ணம், எழுச்சி, மலர்ச்சி என பல பொருள் உள்ளன. நம் வீட்டு வாசலின் அடையாளம் கோலம்தான்.

காஞ்சி மஹாபெரியவரை தரிசிக்க வந்த பணக்காரர் ஒருவர், எல்லாம் இருந்தும் குடும்பத்தில் அமைதியில்லை என முறையிட்டார். அவரது மனைனவியிடம், ''தினமும் கோலமிடுவீர்களா...'' என சுவாமிகள் கேட்டார். அவளும் தலையாட்டினாள். யார் அதைச் செய்கிறார்கள் எனக் கேட்ட போது 'வேலைக்காரப்பெண்' என்றாள். புன்னகைத்த மஹாபெரியவர், ''பணவசதி இருந்தாலும் காலையில் வாசலை சுத்தம் செய்து சாணம் கலந்த நீரைத் தெளிக்க வேண்டும். அது வாசல் சுத்தமாக்கிட மட்டுமல்ல. அதுவே பூமாதேவிக்குச் செய்யும் பூஜை. அரிசி மாப்பொடி(கல்பொடி அல்ல) கொண்டு கோலமிடுவதால் எறும்பு முதலான உயிர்கள் உண்ணும். இதன் மூலம் நம் பரம்பரைக்கே நன்மை உண்டாகும் என்றார். மகிழ்ச்சியுடன் விடை

பெற்ற தம்பதி மீண்டும் தரிசிக்க வந்தபோது அவர்களின் முகம் ஆனந்தமாக இருந்தது.

கோலம் இடுவது சிறந்த உடற்பயிற்சி. இதன் மூலம் இடது பக்க மூளை சிறப்பாகச் செயல்படும் என்கிறது அறிவியல். வாசல் அழகாக இருக்கும்

போது உள்ளமும் அழகாக மாறிவிடும். காலையில் கோலம் இடுவதில் மகிழ்ச்சி, திருப்தி ஏற்படும் போது அந்த நாள் முழுக்க உற்சாகமாக இருக்கும்.

புள்ளி வைத்து கோலமிட்டால் மன ஒருமைப்பாடு உண்டாகும். அதுவே அன்றைய தியானமாகிறது. புள்ளிகளை இணைக்கத் தெரிந்தவர்களால் வாழ்க்கை எவ்வளவு வளைந்தாலும் முழுமைக்கு கொண்டு வர முடியும். புள்ளிகளை இணைப்பவர்களால் உறவுகளையும் இணைக்க முடியும். மனக்கணக்கு அறிந்தவர்கள் வாழ்வியல் கணக்கையும் எளிதாக அறிகிறார்கள். ரங்கோலி என்ற வண்ணக்கோலம் வரைவதன் மூலம் எந்த வண்ணம் எந்த வண்ணத்தோடு இணைந்தால் அழகாக இருக்கும் என்பதை அறிந்திருப்பார்கள். அதனால் கோலத்தில் சிவப்பிற்கு அருகில் ரோைஸயும், பச்சைக்கு அருகில் இளம் பச்சையையும், வெளிப்புறம் மேலும் அழகாக்க வெள்ளையை பார்டராக ஆக்கும் போது ரங்கோலி கோலம் பிரகாசிக்கும். கோபப்படும் சூழலில் இருந்தாலும் வண்ணங்களைப் பார்த்தால் மனதில் அமைதி ஆட்கொள்ளும். இந்த மனோதத்துவத்தை அறிந்தால் குடும்பத்தில் விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

காலையில் எழும் நேரத்தைப் பொறுத்து பெரிய கோலம், நடுத்தரக் கோலம், சிறிய கோலம் என திட்டமிடும் பெண்களால் பொருளாதாரச் சிக்கல் வரும் போது இருப்பிற்கு ஏற்ப முடிவெடுக்கும் மேலாண்மைத்திறன் எம்.பி.ஏ., படிக்காமலே கிடைக்கும்.

மார்கழியில் அதிகாலையில் எழுந்து கோலமிடுவதால் ஓசோன் வாயுவை சுவாசிக்க வாய்ப்பு கிடைக்கிறது. இதன் மூலம் கருப்பை பிரச்னைகள் தீர்கின்றன. மேலும் குனிந்து, நிமிர்ந்து, வளைந்து கோலமிடுவதால் பெண்களுக்கு இடுப்பு பகுதி பலம் பெறும். வாசலில் கோலமிட்டு செம்மண் இடுவதன் மூலம் துஷ்ட சக்திகள் அண்டாது.

அந்த காலத்தில் மணமாகாத ஆணோ, பெண்ணோ இருக்கும் வீட்டில் மார்கழி மாதத்தில் கோலமிட்டு சாண

உருண்டையில் பூசணிப் பூவைச் செருகி வைப்பர். அதுதான் அந்தக் காலத்து மேட்ரிமோனிகள். தை பிறந்ததும் அந்த வீட்டைப் பெரியவர்கள் அணுகி திருமணம் பேசி முடிப்பர். இவ்வாறு கோலங்கள் இளம் தலைமுறைக்கு வாழ்க்கை கோலத்தைக் கற்றுத் தருகிறது.

பூசணிப்பூ பொன்னிறம் பிரம்மாவையும், பசுஞ்சாணம் கரும்பச்சையால் மகாவிஷ்ணுவையும், செம்மண் சிவபெருமானையும் நினைவுபடுத்தும் வண்ணங்கள். கோலங்கள் எவ்வளவு செய்தியை நமக்கு இன்னும் இன்னும் வழங்கிக் கொண்டே இருக்கிறது. எனவே வளரும் தலைமுறையினரிடம் கோலம் இடுவது என்பது வெறும் சடங்கு

அல்ல. வாழ்வியல் தத்துவம் என்பதை உணர்த்திட வேண்டும்.

திருமணக் கோலம், பொங்கல் கோலம், நடுவீட்டுக் கோலம், நவக்கிரகக் கோலம் என கோல வகைகள் ஏராளம். எனவே வீட்டு வாசல்களில் கோலமிடுவோம். வாழ்வைக் கோலாகலமாக கொண்டாடுவோம்.

-தொடரும்

இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்

93617 89870






      Dinamalar
      Follow us