sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

அம்மாடியோவ்... ஆஞ்சநேயர்

/

அம்மாடியோவ்... ஆஞ்சநேயர்

அம்மாடியோவ்... ஆஞ்சநேயர்

அம்மாடியோவ்... ஆஞ்சநேயர்


ADDED : மே 24, 2024 08:04 AM

Google News

ADDED : மே 24, 2024 08:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் கம்பீரமாக 37 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் கோயில் கொண்டிருக்கிறார். சஞ்சீவன ஆஞ்சநேயர் என்ற திருநாமம் கொண்ட இவரை தரிசித்தால் எதிர்காலம் சிறப்பாகும்.

அஞ்சனை, வாயுபகவான் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஆஞ்சநேயர். ஞானம், பக்தி, பலம், வீரம், புகழ், சேவை, பணிவு மிக்கவர் இவர். மனைவியைப் பிரிந்து வருந்திய ராமருக்கும், அசோக வனத்தில் தவித்த சீதைக்கும் துணைநின்றார்.

ராம நாமத்தை ஜபிக்கும் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்யும் மகாபிரபு இவர். ராமநாமம் ஒலிக்கும் இடங்களில் எழுந்தருளும் தலைசிறந்த ராமபக்தர். இவரை வழிபடும் பக்தரான ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வாசுதேவன் தினமும் 'ஸ்ரீராமஜெயம்' எழுதி வந்தார். அவரின் கனவில் தோன்றி ஆஞ்சநேயர் ஆசி வழங்கினார்.

மனம் மகிழ்ந்த பக்தர், பிறரின் உதவியுடன் ஆஞ்சநேயர் சிலையை பிரதிஷ்டை செய்தார். வளாகத்தில் சக்கரத்தாழ்வார், ராமர், சீதை, லட்சுமணர், நரசிம்மர் சன்னதிகள் உள்ளன.

ஆஞ்சநேயர் குறித்து காஞ்சி மஹாபெரியவர், 'மற்ற நல்ல பண்புகளுடன் மனிதன் அடக்கமாக இருப்பது அவசியம். எத்தனை வாய்ப்பு கிடைத்தாலும் போதாது எனத் துள்ளும் இயல்பு கொண்டது மனம்.

இதனால் அதிருப்தி, குறைகள் தான் உண்டாகும். ஆனால் அடக்கமுடன் இருப்பவருக்கு ராமரின் அருள் கிடைக்கும். அதுதான் முழுமையான நிறைவு. அதை நமக்கு தருபவர் ஆஞ்சநேயர்.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே

ஒன்றைத் தாவி.

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர்

காக்க ஏகி.

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்

கண்டு அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை

அளித்துக் காப்பான்.

என்ற பாடலை பாடி ஆஞ்சநேயர் அருளால் மனதை அடக்குவோம்' என்கிறார்.

எப்படி செல்வது: திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து 3 கி.மீ.,

விசஷே நாள்: அமாவாசை, அனுமன் ஜெயந்தி

நேரம்: காலை 7:00 - 1:00 மணி; மாலை 4:00 - 7:30 மணி

தொடர்புக்கு: 94438 35725, 0431 - 243 5165

அருகிலுள்ள தலம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 3 கி.மீ., (சுக்கிர தோஷம் தீர...)

நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மதியம் 3:00 - 9:00 மணி

தொடர்புக்கு: 0431 - 243 2246






      Dinamalar
      Follow us