sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மஞ்சள் சரஸ்வதி

/

மஞ்சள் சரஸ்வதி

மஞ்சள் சரஸ்வதி

மஞ்சள் சரஸ்வதி


ADDED : மே 24, 2024 09:33 AM

Google News

ADDED : மே 24, 2024 09:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிக்கூடங்கள் திறக்கவிருக்கும் இந்த நேரத்தில் புதிய வகுப்பிற்கு செல்ல மாணவர்கள் ஆர்வமாக இருப்பர். இவர்கள் தெலுங்கானா ஆதிலாபாத்தில் பஸாரா ஞானசரஸ்வதியை வழிபட்டால் படிப்பில் சிறந்து விளங்கலாம். மஞ்சள் காப்புடன் காட்சிதரும் இவளை வியாழனன்று தரிசிப்பது விசஷேம்.

மகாபாரதத்தை எழுதியவர் வியாச மகரிஷி. இவர் கோதாவரி நதிக்கரையில் தவம் செய்த போது சரஸ்வதி தோன்றி, 'மகாலட்சுமி, பார்வதியோடு சேர்த்து எனக்கு ஒரு கோயில் கட்டுங்கள்' என உத்தரவிட்டாள். அதன்படி வியாசரும் மூன்று தேவியருக்கும் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்ட பிறகே மகாபாரதத்தை எழுத ஆரம்பித்தார். இதனால் இவ்வூருக்கு 'வியாசபுரி' எனப் பெயர் வந்தது. பிற்காலத்தில் 'வஸாரா' என்றும், 'பஸாரா' என்றும் மாறியது.

கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் 'சூர்யேஸ்வர சுவாமி'யை சிவலிங்க வடிவில் தரிசிக்கலாம். தினமும் இவர் மீது சூரியக்கதிர் படுவதால் 'சூர்யேஸ்வரர்' எனப்படுகிறார். சாளுக்கிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலைச் சுற்றி எட்டு தீர்த்தங்கள் உள்ளன.

ஞான சரஸ்வதி கைகளில் வீணை, அட்சமாலை, ஏடு தாங்கியபடி இருக்கிறாள். அருகில் மகாலட்சுமியும், பிரகாரத்தில் மகாகாளியும் உள்ளனர். இக்கோயிலில் பிரசாதமாக தரப்படும் மஞ்சளைச் சாப்பிட்டால் புத்தி சாதுர்யம் அதிகரிக்கும்.

வியாசர் தவம் புரிந்த குகையையும் தரிசிக்கலாம். இப்பகுதியில் உள்ள பக்தர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன் இங்கு வழிபடுகின்றனர் பின்னரே தங்களின் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கின்றனர்.



எப்படி செல்வது: ஐதராபாத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை (என்.எச்-44) வழியாக 220 கி.மீ.,

விசஷே நாள்: வியாழன், நவராத்திரி, சரஸ்வதி பூஜை

நேரம்: அதிகாலை 4:00 - 12:30 மணி; மதியம் 3:00 - 8:30 மணி

தொடர்புக்கு: 048752 - 243 503, 243 550

அருகிலுள்ள தலம்: வாராங்கல் ஸ்வேதார்க்கமூல விநாயகர் கோயில் 278 கி.மீ., (புத்திசாலித்தனம் அதிகரிக்க...)

நேரம்: காலை 6:00 - 10:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 0870- 256 6262






      Dinamalar
      Follow us