
திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் நதிகளுக்கு இடையில் லால்குடியில் உள்ளது இடையாற்றுமங்கலம். இங்கு மங்களாம்பிகையுடன் மாங்கல்யேஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் விலகும். இங்கு மாங்கல்ய மகரிஷி வழிபாடு செய்துள்ளார்.
உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்த இவர் அகத்தியர், வசிஷ்டர் ஆகியோரின் திருமணத்தில் மாங்கல்ய தாரண பூஜை (தாலி கட்டும் சுபநிகழ்வு) நடத்தியவர். மாலைகளை தாங்கி வானில் பறக்கும் அட்சதை தேவதைகள், மாங்கல்ய தேவதைகளுக்கு எல்லாம் இவரே குரு. திருமண வைபவத்தில் மணமக்களை வாழ்த்துபவர் இவரே. அமிர்த நேரத்தில் இங்கு வழிபாடு செய்து தன் சக்தியை அதிகரித்துக் கொள்கிறார் மகரிஷி.
மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் இங்கு ஜாதகம் வைத்து பூஜை செய்கின்றனர். திருமண அழைப்பிதழ் தயாரானதும் குலதெய்வத்தை வழிபட்ட பிறகு, இங்கு வழிபடுவது சிறப்பு. இதனால் திருமணம் சுபமாக நடக்கும். பிறகு தம்பதியாக வந்து நன்றி செலுத்துகின்றனர்.
உத்திர நட்சத்திரத்திற்குரிய கோயில் இது. இந்த நட்சத்திரம் மங்களம் நிறைந்தது என்பதால் தெய்வீக திருமணங்கள் பங்குனி உத்திர நாளில் நடக்கின்றன.
எப்படி செல்வது: திருச்சி - சிதம்பரம் வழியில் லால்குடி சாலையில் வாளாடியில் இருந்து 8 கி.மீ.,
நேரம்: காலை 9:00 - 12:30 மணி; மாலை 6:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 98439 51363