sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

சங்கடம் தீர்க்கும் சதுர்கால பைரவர்

/

சங்கடம் தீர்க்கும் சதுர்கால பைரவர்

சங்கடம் தீர்க்கும் சதுர்கால பைரவர்

சங்கடம் தீர்க்கும் சதுர்கால பைரவர்


ADDED : செப் 27, 2018 02:16 PM

Google News

ADDED : செப் 27, 2018 02:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்பகோணம் அருகில் உள்ள திருவிசநல்லுாரில் ஒரே இடத்தில் நான்கு பைரவர்கள் உள்ளனர். சதுர்கால பைரவரான இவர்களை அஷ்டமியன்று தரிசிக்க சங்கடம் தீரும். ராஜயோகம் உண்டாகும்.

பிரம்மாவின் மகனான விஷ்ணு சர்மா ஆறு சகோதரர்களுடன் சிவனை நோக்கி தவமிருந்தார். மகிழ்ந்த சிவன் அவர்களை ஏழு ஜோதிகளாக மாற்றி தன்னுடன் ஐக்கியப்படுத்தினார். அவரே இங்கு 'சிவயோகிநாதர்' என்னும் பெயரில் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். பிறருக்கு தீங்கு செய்த பாவி ஒருவன், மரண பயத்தால் வருந்தினான். பாவத்திற்கு பரிகாரமாக சிவயோகிநாதரைச் சரணடைந்தான். மனமிரங்கிய சிவன், அவனுக்கு உதவி புரியுமாறு நந்திக்கு கட்டளையிட்டார். உடனே நந்தி தலையை திருப்பி அவனைப் பார்க்க பாவம் நீங்கியது. இதனை வெளிப்படுத்தும் விதமாக இங்கு நந்தி வாசலைப் பார்க்கும் நிலையில் உள்ளது. கொடிமரம், பலி பீடத்திற்கு முன்னதாக நந்தி மண்டபம் உள்ளது. சவுந்தர்ய நாயகியம்மன் தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்கிறாள். அகத்தியர், ஜடாயு வழிபட்ட தலம் இது.

கேரள மன்னர் ஒருவர் பெண்ணாசையால் பாவச் செயல்களில் ஈடுபட்டார். ஆனால் ஒருமுறை மன்னரைக் காண வந்த துறவியின் உபதேசத்தால் மனம் திருந்தினார். திருவிசநல்லுாரின் மகிமையைக் கேள்விப்பட்ட மன்னர் பாவம் தீர காவிரியில் நீராடி சிவயோகிநாதரை தரிசித்தார். பெண்ணாசையால் பாவம் செய்தவர்கள் இங்கு வழிபடுவது நல்லது.

கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகத்திற்கு உரியவர்களான ஞானகால பைரவர், சொர்ண ஆகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் என்னும் சதுர்கால பைரவர்கள் இங்குள்ளனர். கல்வியில் மேம்பட ஞானகால பைரவரையும், கடன் பிரச்னை தீர சொர்ண ஆகர்ஷண பைரவரையும், பதவி உயர்வு பெற உன்மத்த பைரவரையும், உடல்நலம், பேச்சுத்திறனில் சிறக்க யோக பைரவரையும் பக்தர்கள் வழிபடுகின்றனர். சங்கடம் தீர தேய்பிறை அஷ்டமியிலும், ராஜயோகம் உண்டாக வளர்பிறை அஷ்டமியிலும் சதுர்கால பைரவரை வழிபடுகின்றனர். எட்டு ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் (மாலை 4:30 - 6:00 மணி) வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும். ரிஷப ராசியினரின் பரிகாரத்தலம் என்பதால் கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடுவது நல்லது. 700 ஆண்டுக்கு முற்பட்ட சூரியஒளி கடிகாரம் இங்குள்ளது. உதிப்பது முதல் மறைவது வரை சூரியன் செல்லும் பாதையை கணக்கிட்டு இது அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு வாழ்ந்த மகான் ஸ்ரீதர ஐயாவாள். ஒரு அமாவாசையன்று ஏழை ஒருவர் இவரிடம் பிச்சை கேட்டார். வீட்டில் அமாவாசை சிராத்தம் நடந்த போதிலும் அவர் மறுக்கவில்லை. இதையறிந்த அந்தணர்கள் ஐயாவாளை ஊரை விட்டு விலக்கி வைத்ததோடு, பாவம் தீர கங்கையில் நீராடவும் வற்புறுத்தினர். சிவனை வழிபட்ட ஐயாவாள் ' கங்காஷ்டகம்' என்னும் ஸ்லோகம் பாடவே, அவரது வீட்டுக்கிணற்றில் கங்கைநீர் பொங்கியது. இந்த அதிசயத்தை கண்ட அந்தணர்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்டினர். கார்த்திகை மாத அமாவாசையன்று இந்த விழா நடக்கிறது.

எப்படி செல்வது: கும்பகோணத்தில் இருந்து வேப்பத்துார் வழியாக 8 கி.மீ.,

விசேஷ நாட்கள்: சித்திரை மாதம் முதல் மூன்றுநாள் சூரியஒளி பூஜை, ஐப்பசி கடைசி நாள் காவிரி தீர்த்தவாரி, வளர்பிறை அஷ்டமியில் ஹோமம் மகா சிவராத்திரி, பிரதோஷம்

நேரம்: காலை 8:00 - 12:00 மணி; மாலை 4:00 - 08:00 மணி

தொடர்புக்கு : 93671 47831

அருகிலுள்ள தலம்: 4 கி.மீ., தொலைவில் திருவிடைமருதுார் மகாலிங்கசுவாமி கோயில்






      Dinamalar
      Follow us