sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மகாலட்சுமியே வருக... ஐஸ்வர்யம் தருக

/

மகாலட்சுமியே வருக... ஐஸ்வர்யம் தருக

மகாலட்சுமியே வருக... ஐஸ்வர்யம் தருக

மகாலட்சுமியே வருக... ஐஸ்வர்யம் தருக


ADDED : ஆக 25, 2023 11:24 AM

Google News

ADDED : ஆக 25, 2023 11:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்ணம், சொல், செயல் என மூன்றும் நல்லதை சிந்தித்தால் எல்லாம் நல்லதாகவே நடக்கும். அது மட்டும் இல்லை. இதை பின்பற்றும் மனிதர்களின் மனதில் மகாலட்சுமி விருப்பத்துடன் வந்து குடியேறுவாள். இதற்கு முதலில் எண்ணம் துாய்மையாக இருக்க வேண்டும். இதற்கு கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள பள்ளிப்புரத்திற்கு வாருங்கள். இங்கு மகாலட்சுமி உங்களுக்காக காத்திருக்கிறாள்.

முன்னொரு காலத்தில் காஞ்சிபுரம் பகுதியில் நெசவுத்தொழில் செய்த மக்கள், வியாபாரம் செய்வதற்காக கேரளத்தின் சேர்த்தலா பகுதியில் குடியேறினர். காஞ்சிபுரத்தின் அருகேயுள்ள ஐயங்கார்குளம் ஏரிக்கரையில் அருள்பாலித்த மகாலட்சுமிதேவியே அவர்களின் குலதெய்வம். எனவே புதிய இடத்திலும் தங்களின் குலதெய்வத்துக்கு கோயில் அமைத்தனர். அவர்களின் வாழ்வும் செழித்தது. இதனால் மகிழ்ந்த மகாலட்சுமி ஐயங்கார்குளம் ஊரின் ஏரிக்கரையில் இருந்து, முதலை மீது அமர்ந்து கேரளத்தின் சேர்த்தலா பகுதிக்கு வந்தாள். இன்றும் மகாலட்சுமி வந்து இறங்கிய இடத்தை பராமரிக்கின்றனர்.

இந்த இடத்தில் இருக்கும் நீர் மட்டும் சுவையான குடிநீராக உள்ளது. ஆரம்ப காலத்தில் மகாலட்சுமியின் வாகனமான முதலைக்கு உணவு கொடுத்து கோயில் அருகிலேயே வழிபட்டனர். பின் கல்லால் முதலையின் சிலையை வடித்து கோயில் கர்ப்பகிரகத்தின் அருகில் வைத்து விட்டார்கள்.

அஷ்ட ஐஸ்வரியங்களையும் கொடுக்கும் இந்த மகாலட்சுமியை, 'கடவில் ஸ்ரீ மகாலட்சுமி' என அழைக்கின்றனர். முன் கைகளில் நெல்கதிரும் கிளியும், பின் கைகளில் சங்கும் சக்கரமும் ஏந்தி இருக்கிறாள். இந்த தாயை ஒருமுறை வணங்கினாலே போதும். உங்களுக்கு செல்வத்தை வாரி வழங்குவாள்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு அதிதேவதை இருக்கும். இக்கோயிலின் நுழைவுவாயிலில் ஒன்பது கிரகங்களுக்குமான அதிதேவதைகள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கின்றனர். கோயில் சுற்றுப் பகுதியில் கணபதி, ஐயப்பன், சிவன், கொடுங்காளி, க்ஷேத்திர பாலகர்கள் உள்ளனர்.

எப்படி செல்வது: ஆலப்புழாவில் இருந்து 32 கி.மீ.,

விசேஷ நாள்: நவராத்திரி மகரசங்கராந்தி, மஹா சிவராத்திரி ஆடி வெள்ளி

நேரம்: அதிகாலை 5:00 - 11:00 மணி; மாலை 5:30 - 8:00 மணி

தொடர்புக்கு: 94464 93183, 0478 - 255 2805

அருகிலுள்ள தலம்: சேர்த்தலா தன்வந்திரி பகவான் கோயில் 13 கி.மீ.,

நேரம்: அதிகாலை 5:00 - 10:30 மணி; மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 92491 13355; 0478 - 282 2962






      Dinamalar
      Follow us