sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

இதுவும் கடந்து போகும்

/

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்


ADDED : மே 12, 2023 04:36 PM

Google News

ADDED : மே 12, 2023 04:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழ்க்கை என்பது என்ன? நாம் உள்ளே இழுக்கும் மூச்சுக்கும், வெளியே விடும் மூச்சுக்கும் இடையே உள்ள இடைவெளிதான். அந்த இடைவெளியை அன்பு, கருணை, பாசம், பணிவு, நன்றி என்ற நற்பண்புகளால் நிரப்பலாம். இப்படி செய்தால் சொர்க்கக்கதவு தானாக திறக்கும். இப்படி சொர்க்கத்திற்கு செல்ல தேவையான டிக்கட்தான் நற்பண்பு. சிலரிடம் இந்த பண்பு இயற்கையாகவே இருக்கும். இல்லாதவர்களுக்கு நற்பண்பு என்னும் டிக்கட் தர காத்திருக்கிறாள் திருவண்ணாமலை காமாட்சி அம்பாள்.

என்னவென்று விவரிக்க முடியாத அற்புதம் நிறைந்த தலம் திருவண்ணாமலை. இங்கு தனக்கே உரித்தான பாணியில் அழகாக கொலு வீற்றிருக்கிறாள் காமாட்சி. சின்னக்குழந்தையாக கனிவு கொப்பளிக்கும் கண்ணால் நம்மை வரவேற்கிறாள். எந்தவொரு வேண்டுதலாக இருந்தாலும் அவளது காலடியில் வைத்தால் போதும். உடனடியாக நிறைவேறும்.

உண்மையான பக்தியுடன் இலை, பூ, பழம், தண்ணீர் என ஏதேனும் ஒன்றை கொடுத்தால் போதும். அவளது கருணை கிடைத்து விடும். பிரகாரத்தை வலம் வந்தால் வள்ளி, தெய்வானை, முருகன், விநாயகர், நடராஜரை தரிசிக்கலாம். இங்குள்ள உற்ஸவ மூர்த்திகள் ஒவ்வொன்றும் நம்முடன் பேசும். இப்படி சிறப்பின் பிறப்பிடமாக உள்ள இக்கோயிலில் ஒருமுறை காலடி எடுத்து வைத்தால் போதும். துன்பங்கள் கரைந்து விடும். இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கை பிறக்கும்.

எப்படி செல்வது: திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ.,

விசேஷ நாள்: நவராத்திரி, தீபாவளி

தொடர்புக்கு: 89400 00736; 94434 30713

நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 9:00 மணி

அருகிலுள்ள தலம்: படவேடு ரேணுகாம்பாள் கோயில் 55 கி.மீ.,

நேரம்: காலை 6:30 - 1:00 மணி; மதியம் 3:00 - 8:30 மணி

தொடர்புக்கு: 04181 - 248 224, 248 424






      Dinamalar
      Follow us