sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நம்பிக்கை தரும் நாகதேவதை அம்மன்

/

நம்பிக்கை தரும் நாகதேவதை அம்மன்

நம்பிக்கை தரும் நாகதேவதை அம்மன்

நம்பிக்கை தரும் நாகதேவதை அம்மன்


ADDED : மே 05, 2023 04:36 PM

Google News

ADDED : மே 05, 2023 04:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எந்த சூழ்நிலையிலும் தளராத மனம் கொண்டவருக்கு, உலகில் முடியாதது என்று எதுவுமில்லை. சிலரிடம் இந்த தன்னம்பிக்கை இருப்பதில்லை. இதுபோல் உங்களுக்கும் தன்னம்பிக்கை வேண்டுமா... வேலுார் கோட்டையில் உள்ள நாகதேவதை அம்மன் கோயிலுக்கு வாருங்கள்.

கோட்டையின் உள்ளே சிறிது துாரம் சென்றதும் கோயிலை அடைலாம். உள்ளே நுழைந்ததும் விநாயகர் நம்மை வரவேற்பார். பின் கிழக்கு நோக்கியிருக்கும் நாகதேவதை அம்மனை தரிசிக்கலாம். அம்மனின் விஸ்வரூபம் பிரமிப்பைத் தரும். அவளை பார்க்கும்போது நமக்குள் புதுவித நம்பிக்கை தோன்றும். பின் அவளை சுற்றிவரும்போது அம்மன் வீற்றிருந்த பெரிய ஆலமரத்தையும், பிரகாரத்தில் பச்சையம்மன், பக்த ஆஞ்சநேயரையும் தரிசிக்கலாம்.

ராகு காலத்தில் அம்மனுக்கு 9 நெய் தீபமேற்றி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். இங்கு அமாவாசை தோறும் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடக்கிறது. இதில் கலந்து கொண்டால் பகைவர் தொல்லை, வியாபாரத் தடை அகலும். பவுர்ணமியன்று உற்ஸவருக்கு பக்தர்களே பாலாபிேஷகம் செய்கின்றனர். பிறகு அம்மனை அலங்கரித்து, ஊஞ்சலில் அமர்த்தி தாலாட்டு பாடுகின்றனர். ராகு கேது பெயர்ச்சியின் போது இங்கு சிறப்பு யாகமும் நடக்கிறது.

எப்படி செல்வது: வேலூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து 1.5 கி.மீ.,

விசேஷ நாள்: செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ராகு காலம், பவுர்ணமி, அமாவாசை

நேரம்: காலை 7.00 - 1.00 மணி; மாலை 4.00 - 7.30 மணி

காலை 7.00 - இரவு 7.30 மணி (செவ்வாய், வெள்ளி)

தொடர்புக்கு: 95668 64925, 0416-222 8925

அருகிலுள்ள தலம்: ஜலகண்டேஸ்வரர் கோயில் 0.5 கி.மீ.,

நேரம்: காலை 6.30 - 1.00 மணி; மதியம் 3.00 - 8.30 மணி

தொடர்புக்கு: 98947 45768, 98946 82111






      Dinamalar
      Follow us