
* எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படு. எல்லாம் உன் வசமாகும்.
* உன் உழைப்பில் வாழ்வதே உண்மையான கவுரவம்.
* எல்லோரிடமும் இனிமையாகப் பேசு.
* நல்லவர்களோடு பழகு. அவர்களது அறிவுரையே உனக்கு சொத்து.
* தர்மம் செய்வதில் எப்போதும் விருப்பம் கொள்.
* நல்ல செயல்களை முன்னின்று செய்.
* இளமைக் காலமே படிப்பதற்கு ஏற்ற காலம்.
* உனக்கு தெரிந்த விஷயத்தை பிறருக்கும் சொல்லிக்கொடு.
* எந்தவொரு செயலையும் அக்கறையுடன் செய்.
* பெருமை தரும் வழியில் சென்று கொண்டே இரு.
* அளவுக்கு அதிகமாக சாப்பிடாதே. மீறினால் கஷ்டப்படுவாய்.
* எவ்வித எதிர்பார்ப்புமின்றி பிறருக்கு உதவி செய்.
* நன்றாக யோசித்த பிறகு ஒரு செயலில் இறங்கு.
* நல்ல நுால்களை தேடிப்படி. அறிவு வளரும்.
* வறுமையான காலத்திலும் நல்லவர்களின் குணம் மாறாது.
* பிறருக்கு உதவாத பணம் தீய வழியில் காணாமல் போகும்.
* முயற்சி செய்தும் ஒரு விஷயம் நடக்கவில்லையா... அதை மறந்துவிடு.
என்கிறார் அவ்வையார்

