sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

பெண்களுக்கு முதல் மரியாதை

/

பெண்களுக்கு முதல் மரியாதை

பெண்களுக்கு முதல் மரியாதை

பெண்களுக்கு முதல் மரியாதை


ADDED : ஜூலை 02, 2023 10:41 AM

Google News

ADDED : ஜூலை 02, 2023 10:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்களுக்கு முதல் மரியாதை கொடுப்பதில் ஹிந்துக்கள் முதன்மையானவர்கள். ஐநுாறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெண்கள் தொட்டு வடம்பிடிக்கும் கோயில் ஒன்றுள்ளது தெரியுமா... ஒடிஸா புரி ஜெகன்நாதர் கோயில் போல மயூர் பஞ்ச் மாவட்டம் பரிபடாவில் உள்ள கோயில் தாங்க அது. வாங்க தரிசிப்போம்.

புரி ஜெகன் நாதரின் பக்தராக விளங்கியவர் இப்பகுதியை ஆண்ட மன்னர்களில் ஒருவர். அவர் சுவாமியை தரிசிக்க வரும் போது அரசராக இருந்தாலும் ஆடம்பரமாக வரக்கூடாது என அங்கிருந்தவர்கள் அனுமதிக்கவில்லை. புரிக்கு அருகே அதர்நலா என்ற இடத்தில் தங்கி இருந்தார். அன்றிரவு கனவில் ஜெகன்நாதர் நீேய எனக்கு கோயில் எழுப்புக என கூறி மறைந்தார்.

போகமண்டம், நடன மண்டபம், ஜகன் மோகன மண்டபம், கருவறை என புரி ஜெகன்நாதர் கோயிலை போலவே 1497 ல் கட்டினார் அரசர். கருவறையில் கிருஷ்ணர், சுபத்திரை, பலராமரை தரிசிக்கலாம்.

மூன்று தேர்களும் ரத வீதிகளில் வலம் வரும் காட்சி அருமையாக இருக்கும். சுபத்திரை தேரை பெண்கள் இழுக்க வேண்டும் என்ற வழக்கம் வழிவழியாக பின்பற்றப்படுகிறது. தேர் வரும் போது பக்தர்கள் லட்டுகளை வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.

ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து திருவிழாவுக்கு அதிக பக்தர்கள் வருகின்றனர். இவ்வூரில் மற்றொரு இடத்தில் குள்ளக்கோயில் என்ற பெயரில் இம்மூவரும் அருள் செய்கின்றனர்.பழமையான ஜெயின் தீர்த்தங்கள் சிலைகளும் இக்கோயிலில் உள்ளன.

எப்படி செல்வது: புவனேஸ்வரிலிருந்து 251 கி.மீ.,

விசேஷ நாள்: ரத உற்ஸவம் கிருஷ்ணர் ஜெயந்தி

நேரம்: காலை 6:00 - 2:00 மணி; மாலை 5:30 - 9:30 மணி

தொடர்புக்கு: 077509 92854

அருகிலுள்ள தலம்: புரி ஜெகன்நாதர் கோயில் 308 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - இரவு 10:00 மணி

தொடர்புக்கு: 06752 - 222 829






      Dinamalar
      Follow us