sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நாடு நலம் பெற...

/

நாடு நலம் பெற...

நாடு நலம் பெற...

நாடு நலம் பெற...


ADDED : டிச 17, 2020 05:42 PM

Google News

ADDED : டிச 17, 2020 05:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிச.10 - பிறந்த நாள்

* தாய் போன்றது தர்மம். தந்தை போன்றது நிர்வாகம். இரண்டும் இணைந்தால் நாடு நலம் பெறும்.

* ஒழுக்கம், நேர்மை மிக்கவர்களால் சமுதாயம் நன்மை அடையும்.

* கோபத்தால் முகத்தின் அழகு கெடும். அமைதியால் முகம் பொலிவு பெறும்.

* தியானத்தில் ஈடுபட்டால் கடவுளின் அருள் கிடைக்கும்.

* நம்பிக்கை, நன்னடத்தை, நல்லொழுக்கமே வெற்றிக்கான வழிகள்.

* மனிதன் பின்பற்ற வேண்டிய பண்புகளில் அடிப்படையானது அன்பு.

* சுதந்திரம் இல்லாத நாடு உயிர் இல்லாத உடல் போன்றது.

* கவலைப்படுவதால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்காது.

* துன்பத்தை அனுபவித்தால் தான் சுகத்தின் அருமை தெரியும்.

* பிழையை திருத்திக் கொள்வதால் அவமானம் ஏற்படாது.

* அறிவுக்கு முற்றுப்புள்ளி கிடையாது. வாழும் வரை அறிவுக்கதவு திறந்திருக்கட்டும்.

* நெற்பயிர் போல மனிதர்கள் பிறந்து வளர்ந்து முதிர்ந்து அறுபடுகிறார்கள்.

* மதங்களில் வேற்றுமை கிடையாது. கருத்தில் தான் வேற்றுமை உள்ளது.

* ஞானமும், பக்தியும் அனைவரும் அடைய வேண்டிய பெருஞ்செல்வம்.

* உடல் என்னும் கோயிலை துாய்மையுடன் வைத்திருப்பது அவசியம்.

* படிப்பு, பணத்தால் மனிதனுக்கு தற்பெருமை கொள்வது கூடாது.

வேண்டுகிறார் ராஜாஜி






      Dinamalar
      Follow us