
* கவலைகளை விட்டு குழந்தை போல மகிழ்ச்சியுடன் இரு.
* இயற்கையை மதித்து வாழ்வது கடவுளை வழிபடுவதற்குச் சமம்.
* பாடுபட்டு சேர்த்த பணத்தில் தர்மம் செய்வதே உண்மையான மகிழ்ச்சி.
* பிறரிடம் ஆறுதல் தேடுவதை விட மனதை சீர்படுத்துவது நல்லது.
* இடைவிடாமல் கடவுளை தியானித்தால் தீய எண்ணம் விலகும்.
* மகிழ்ச்சியான வாழ்விற்கு மனக் கட்டுப்பாடு அவசியம்.
* மனநிறைவு என்பது பணம் சார்ந்தது அல்ல. மனம் சார்ந்தது.
* கடவுள் நம்மை பார்க்கிறார் என்ற நம்பிக்கையுடன் வழிபடு.
* வாழ்வு என்பது காலத்தின் கையில் நடனமாடிக் கொண்டிருக்கிறது.
* எல்லா உயிர்களிலும் கடவுள் குடியிருக்கிறார். அதை யாரும் உணர்வதில்லை.
* ஒவ்வொரு படைப்பிலும் கடவுளின் ஒழுங்குமுறையை காணலாம்.
* நிம்மதியாக வாழ மனிதனுக்கு பரந்த மனம் அவசியம்.
* எந்த பிரச்னைக்கும் தீர்வுண்டு என்பதை உணர்ந்தால் மனம் வருந்தாது.
* லட்சியத்தில் உறுதி கொண்டவனுக்கு மனதில் தெளிவு இருக்கும்.
நெறிப்படுத்துகிறார் தாகூர்