sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

கீதை பாதை - 11

/

கீதை பாதை - 11

கீதை பாதை - 11

கீதை பாதை - 11


ADDED : செப் 02, 2023 05:55 PM

Google News

ADDED : செப் 02, 2023 05:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பக்தர்கள் பல வகையினர்

'பக்தர்கள் பல வகையினர்' என்கிறார் கிருஷ்ணர். அவர்களில் நான்கு வகையினரை குறிப்பிடுகிறார்.

வாழ்வின் துன்பங்களில் இருந்து விடுபட விரும்பும் பக்தர்கள் முதல் வகையினர். இரண்டாவது வகையினர் ஆசை கொள்பவர்கள். வாழ்க்கையில் பொருட்கள் சேர்த்தும், இன்பம் அனுபவித்தும் வாழ விரும்புபவர்கள். எவ்வகை பண்பாடு, கலாசாரம், நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பினும் பெரும்பாலான மக்கள் இந்த இரண்டு வகையைச் சார்ந்தவர்களே.

ஒருவர் தன் நோய்க்கு தகுந்த மருத்துவரை நாடுவது போல பக்தர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ற, தங்கள் தேவையை நிறைவேற்றும் கடவுளை தேர்வு செய்கின்றனர். பிரார்த்தனை, சடங்குகள், பூஜை என பல வழிகளில் வணங்குகின்றனர்.

ஆனால் கிருஷ்ணர் என்ன சொல்கிறார் தெரியுமா? பக்தர்கள் தங்களின் வேண்டுகோளை கடவுளிடம் அர்ப்பணித்து அடிபணியும் போது தான் அவை நிறைவேறுகின்றன என்கிறார். எந்த நிலையிலும் தடுமாற்றம் இன்றி நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து கடவுளை வழிபட வேண்டும் என்கிறார்.

இதை ஒரு சிறு சம்பவம் மூலம் விளக்கலாம். விவசாயத்திற்காக அருகருகே உள்ள நிலத்தில் இருவர் கிணறு தோண்டத் துவங்கினர். முதலாமவர் சிறிதளவு தோண்டிய போது தண்ணீர் வரவில்லை. எனவே நிலத்தின் பல இடங்களில் தோண்டி பல குழிகளை உருவாக்கினார். எதிலும் தண்ணீர் வரவில்லை. இரண்டாமவர் ஒரே குழியை தேர்வு செய்து தோண்டி கொண்டே இருந்தார். முதலில் தண்ணீர் வரவில்லை என்றாலும் மனம் தளராமல் ஆழமாக தோண்டினார். தண்ணீர் கிடைத்தது. தனது முடிவுகளை மாற்றிக்கொண்டே இருக்கவில்லை.

தேர்வு செய்த இடத்தில் முழுக்கவனத்தையும் செலுத்தினார். செயலில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். முதலாவது நபருக்கோ மனசஞ்சலம்; எதிலும் ஆழமாக முழுக்கவனம் செலுத்தாமல் தடுமாற்றம் ஏற்பட்டதால் வெற்றி கிடைக்கவில்லை.

மூன்றாவது வகை பக்தர்கள் ஆசையை கடக்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் உள்ளுணர்வால் தங்களை புரிந்து கொண்டவர்கள். நான்காம் வகை பக்தர்கள் ஆசையின் எல்லைகள் எல்லாம் கடந்த ஞானிகள். அவர்கள் எங்கும், எதிலும் கடவுளைக் காண்பவர்கள், பற்றற்ற நிலையில் எல்லாம் வல்ல பரம்பொருளோடு கலந்திட தகுதியானவர்கள்.

நாம் எவ்வகை பக்தர்கள் என்பதை மனதால் அறிவோம்.

நம் மனஉணர்வுகள் உறுதியற்று இருந்தால் வெற்றி கிடைக்காது. யாருக்கும் அஞ்சாத, சந்தேகமற்ற மனநிலையும், உறுதியான ஈடுபாடும் வெற்றியைத் தரும்.

குடும்பம், உறவு, வேலை என எந்த விஷயமாக இருந்தாலும் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டால் வெற்றி வந்து சேரும். பக்தியில் முழுகவனம், ஈடுபாடு கொண்டவர்களாக கடவுளைச் சரணடைய வேண்டும்.

-தொடரும்

கே.சிவபிரசாத், ஐ.ஏ.எஸ்.,

தமிழாக்கம்: ஜி.வி.ரமேஷ் குமார்






      Dinamalar
      Follow us