/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
ஒவ்வொரு முகத்திலும் கடவுளை பார்!
/
ஒவ்வொரு முகத்திலும் கடவுளை பார்!
ADDED : அக் 20, 2017 03:53 PM

* எப்போதும் சுறுசுறுப்பாகவும், ஊக்கமாகவும் இரு. கொடுப்பதனால் உனது இதயத்தை மேம்படுத்து. ஏராளமாக தருமம் செய். ஒவ்வொரு முகத்திலும் கடவுளைப் பார்.
* பிறரால் செய்யப்பட்ட கெடுதிகளை மன்னித்து மற. உன்னைப் பகைப்பவர்களுக்கு நன்மையையே செய். எவ்வளவு துன்பங்களையும் சகிக்கத் தயாராயிரு.
* மனதை எப்போதும் சமநிலையில் வைத்துக் கொள். எதையும் பேசுவதற்கு முன் இருமுறை யோசி. ஒரு காரியத்தை செய்வதற்கு முன் மும்முறை யோசி.
* உனது பலவீனங்களையும், தப்புகளையும் கண்டுகொள். மற்றவர்களின் நன்மையையே நோக்கு. ஆசை, கோபம், அகம்பாவம், மோகம் ஆகியவற்றை விலக்கு.
* சாந்தமாகவும் தைரியமாகவும் தடைகளை எதிர்த்து நில். நீ சரியான மார்க்கத்தில் இருக்கும் போது ஆட்சேபனைகளை பொருட்படுத்தாதே. முகஸ்துதிக்கு வசமாகாதே.
* உனது குற்றங்களை நேர்மையாக ஒப்புக் கொள். உனது தேக சுகத்தைப் பாதுகாத்துக் கொள். தினசரி ஆசனங்கள், தேகப்பயிற்சிகள் கைவிடாதே.
* யாராவது உன்னை அவமதித்தாலும், பரிகசித்தாலும், கண்டித்தாலும் கோபம் கொள்ளாதே. அது வெறும் சொற்களே.
சொல்கிறார் சிவானந்தர்