sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மகாராஜா சன்வாரியாஜி

/

மகாராஜா சன்வாரியாஜி

மகாராஜா சன்வாரியாஜி

மகாராஜா சன்வாரியாஜி


ADDED : பிப் 19, 2023 01:39 PM

Google News

ADDED : பிப் 19, 2023 01:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜஸ்தான் சிட்டோகார்க் என்னும் இடத்திலுள்ள கிருஷ்ணர் பிரசித்தி பெற்றவர். மகாராஜாவாக கருதப்படும் இவர் 'சன்வாரியாஜி' என அழைக்கப்படுகிறார். பெனார்ச் நதிக்கரையில் அமைந்த இக்கோயில் கிருஷ்ணர் அரசாட்சி புரிந்த துவாரகைக்கு இணையாக போற்றப்படுகிறது.

போலோராம் குர்ஜார் என்னும் பக்தரின் கனவில் கிருஷ்ணர் தோன்றி, சாப்பர் என்னும் ஊரில் சிலை வடிவில் மண்ணுக்குள் இருப்பதாக தெரிவித்தார். அந்த இடத்தில் மூன்று கருப்பு கிருஷ்ணர் சிலைகள் புதைந்திருந்தன. இப்பகுதியைச் சேர்ந்த சாப்பர், மண்டாபியா, பட்சோடா என்னும் ஊர்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன 5 கி.மீ., சுற்றளவில் இக்கோயில்கள் உள்ளன. இதில் சிட்டோகார்க் கிருஷ்ணர் ராஜபுத்திர மன்னர்களின் இஷ்ட தெய்வமாக திகழ்கிறார். கோயிலின் நுழைவு வாசலில் இருபுறமும் கம்பீரமான யானை சிலைகள் உள்ளன.

ராஜஸ்தானின் குர்ஜாரா பாணியில் குவிமாடம், விமானம், அலங்கார துாண், வளைவுகள், கூரைகள் கட்டப்பட்டுள்ளன. காணும் இடமெல்லாம் ராமாயண, மகாபாரத சிற்பங்கள் கண்ணைக் கவர்கின்றன. இளஞ்சிவப்பு வண்ண சலவைக் கற்களால் கட்டப்பட்ட கோயில் இது. கருவறையின் முன் மண்டபத்தில் உள்ள தொங்கு விளக்குகள், கண்ணாடி வேலைப்பாடுகள் கலைநயம் கொண்டவை.

மூலவர் கிருஷ்ணர் மகாராஜாவைப் போல கிரீடம், கவசம், பலவண்ண ஆடைகள் அணிந்திருக்கிறார். புன்னகையும், தாமரைப்பூ போன்ற கண்களும் கருணையை வெளிப்படுத்துகின்றன. அவருக்கு பிரியமான பசுக்கள், கன்றுகள் அருகில் நிற்கின்றன. சன்னதியின் இருபுறமும் சாமரம் வீசுவோரின் சிற்பங்கள் உள்ளன. சிவபெருமான், அனுமனுக்கு சன்னதிகள் உள்ளன.

எப்படி செல்வது

* சிட்டோகார்கில் இருந்து 30 கி.மீ.,

* உதய்பூரில் இருந்து 82 கி.மீ.,

விசேஷ நாள்: கிருஷ்ண ஜயந்தி, தீபாவளி மகாசிவராத்திரி, ஹோலி

நேரம்: அதிகாலை 5:00 - 11:00 மணி; மாலை 5:30 - 11:00 மணி

தொடர்புக்கு: 01470 - 245 493

அருகிலுள்ள தலம்: ஸ்ரீநாத்வாரா கிருஷ்ணர் கோயில் 116 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 3:55 - 5:55 மணி

தொடர்புக்கு: 02953 - 233 484






      Dinamalar
      Follow us