sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மனம் போன போக்கில் போகலாமா

/

மனம் போன போக்கில் போகலாமா

மனம் போன போக்கில் போகலாமா

மனம் போன போக்கில் போகலாமா


ADDED : ஜூன் 08, 2018 04:14 PM

Google News

ADDED : ஜூன் 08, 2018 04:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளுக்கும், உண்மைக்கும் முக்கியத்துவம் தராமல், மனம் போன போக்கில் வாழ்ந்தால் வாழ்வில் வீழ்ச்சி அடையப் போகிறாய் என்பது பொருள்.

* உலகம் ஒரு போர்க்களம். அதனால் விளைவு குறித்து வருந்தாதே. இன்ப துன்பம், லாபநஷ்டம், வெற்றி, தோல்வி என அனைத்தையும் சமமாக கருது.

* மனம் வெளிப்புறமாகச் சென்றால் அது தீமையின் பக்கம் அழைத்துச் செல்லும். உனக்குள்ளேயே திருப்பினால், அது கடவுளின் பக்கம் செல்லும்.

* கடவுளிடம் நம்பிக்கை கொண்டால் நிம்மதியுடன் வாழலாம். உன்னால் நியாயத்தின் பக்கம் நிற்க முடியும்.

* கடவுள் மீது அன்பு செலுத்தினால் அவருடைய சாயலாக மாறுவாய், அவரைப் போலவே துாய்மை, மகிமை மிக்கவனாக இருப்பாய்.

* தெய்வ நிலைக்கு உயர்த்துவது பக்தி. இதை விடச் சிறந்ததும், எளிதாகப் பின்பற்றக் கூடியது வேறில்லை.

* தன்னலமற்ற இறைத் தொண்டே வாழ்வின் லட்சியம். சமயச்சடங்குகள், வழிபாட்டு முறைகளை விட கடவுளை அடைவதற்கு தொண்டே சிறந்த வழி.

* நியாயம், தர்மம், ஒழுக்கமுடன் வாழ சிறந்த மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படி. அதன் வழிமுறைகளை பின்பற்று.

* உன் மதிப்பு குறித்து உன்னை அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள். உன்னை நீயே பெரியவனாக எண்ணினால், அது வெறும் கற்பனையே.

கேட்கிறார் ராமகிருஷ்ணானந்தர்






      Dinamalar
      Follow us