
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தாயின் உள்ளத்தில் இல்லாத கடவுள் வேறெங்கும் இருப்பதில்லை. அன்னையே நாம் வணங்க வேண்டிய கோயில்.
* வாழ்க்கை என்னும் மரத்திற்கு இளமையில் பயிலும் கல்வி வேராக துணை நிற்கிறது.
* ஆன்மிகத்தை கைவிட்டால் மனிதன் தன் நிலையில் இருந்து தாழ்ந்து, விலங்கு நிலையை அடைவான்.
* ஒழுக்கம் உயிர் போன்றது. ஒழுக்கம் உள்ளவன் இருக்கும் இடத்தில் தெய்வம் ஆட்சி செய்யும்.
* எல்லா உயிர்களும் கடவுளின் பிள்ளைகளே. அதனால் யாரிடமும் உயர்வு, தாழ்வு பாராட்டக் கூடாது.
* உடல் நமக்கு கடவுள் அளித்த பரிசு. இதை நல்வழியில் பயன்படுத்துவது கடமை.
* மற்றவர்களுக்காக வாழும் போது வாழ்வு சிறப்படைகிறது. அதுவே உண்மையான அமைதியை ஒருவனுக்கு கொடுக்கும்.
* ஆன்மிகம் இந்த உலக வாழ்க்கையை தூய்மைப்படுத்துவதோடு, மறு உலக வாழ்விற்கும் வழி காட்டுகிறது.
வழிபடுகிறார் திரு.வி.க.,

