/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
நெஞ்சுக்கு நிம்மதி; ஆண்டவன் சன்னதி
/
நெஞ்சுக்கு நிம்மதி; ஆண்டவன் சன்னதி
ADDED : ஆக 04, 2017 12:42 PM

* கடவுள் எங்கேயோ இருப்பதாக நினைக்க வேண்டாம். நமக்கு மிக அருகிலேயே இருக்கிறார். எப்போதும் இதை மனதில் நினைத்தால் நிம்மதியாக வாழ முடியும்.
* கடவுளை தாயாகக் கருதி வணங்குவது மிகவும் உயர்வானது. தந்தை, குழந்தை வடிவிலும்
வழிபடலாம்.
* காலையில் கண் விழித்ததும் ''கடவுளே...என் உள்ளம் என்னும் கோயிலைத் தூய்மையுடன் இருக்கச் செய்'' என்று பிரார்த்தியுங்கள்.
* இரவில் தூங்கும் முன்,'' இன்று செய்த குற்றங்கள் இன்றோடு போகட்டும். மறுபடியும் அதைச் செய்யாதிருக்க அருள்புரிவாய்'' என் வேண்டுங்கள்.
* தியானம் செய்ய நிற்கவோ, உட்காரவோ வேண்டாம். படுத்த நிலையில் கூட செய்யலாம். மனம் ஒருமுகப்பட்டு இருந்தால் போதும்.
* பலனை எதிர்பார்த்து மட்டும் கடவுள் மீது பக்தி செலுத்தக் கூடாது. ஆசை, ஆணவம் ஆகியவற்றில் இருந்து மனதை பாதுகாப்பவனே நல்ல பக்திமான்.
* பக்தி ஆழமானதாக இருந்தால், ஆசாரக்குறைவு நம்மைப் பாதிக்காது. கடவுள் மீது கொண்டிருக்கும் அன்பு உண்மையானதா என்பதை நமக்கு நாமே சோதித்துப் பார்க்க வேண்டும்.
சொல்கிறார் ராஜாஜி

