sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

வெற்றி வந்தால் பணிவு அவசியம்! தோல்வி வந்தால் பொறுமை அவசியம்!

/

வெற்றி வந்தால் பணிவு அவசியம்! தோல்வி வந்தால் பொறுமை அவசியம்!

வெற்றி வந்தால் பணிவு அவசியம்! தோல்வி வந்தால் பொறுமை அவசியம்!

வெற்றி வந்தால் பணிவு அவசியம்! தோல்வி வந்தால் பொறுமை அவசியம்!


ADDED : ஜூலை 10, 2016 10:52 AM

Google News

ADDED : ஜூலை 10, 2016 10:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூலை 14 - சிவானந்தர் நினைவு நாள்

* பொறுமை, அன்பு, இரக்கம், அமைதி, சகிப்புத்தன்மை ஆகிய நற்குணங்கள் உள்ளவர்கள் தோற்றாலும் கவலைப்படமாட்டார்கள். இந்த குணங்களால் தம்

செயல்களில் வெல்பவர்கள் பணிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* பிறர் தவறே செய்தாலும் அவர்கள் மீது கோபம் கொள்ள வேண்டாம். அவர்களது குற்றங்களை மன்னித்து மறந்து விடுங்கள்.

* உழைப்பே கடவுள் விரும்பும் சிறந்த வழிபாடு. உழைப்பால் கிடைத்த பணத்தை அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். குறைந்தபட்சம் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கையாவது பிறருக்காக செலவழியுங்கள்.

* டன் கணக்கில் தத்துவம் கேட்பதை விட பயனுள்ள பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது. குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் தியானம், யோகப்பயிற்சியில் ஈடுபடுவதை அன்றாடக் கடமையாக கொள்ள வேண்டும்.

* உணவு மிதமான அளவாகவும், எளிதில் ஜீரணமாகும் விதத்திலும் இருக்க வேண்டும். சத்துக்கள் நிறைந்த சரிவிகித உணவாகவும், குறிப்பாக காரம், புளிப்பு போன்ற உணர்ச்சியைத் தூண்டும் உணவுகளைத் தவிர்ப்பதும் அவசியம்.

* தினமும் இரண்டு மணி நேரமும், வாரம் ஒருமுறை நான்கு அல்லது எட்டுமணி நேரமும் மவுனமாக இருப்பது நன்மை அளிக்கும். நீண்ட நடைபயிற்சி அல்லது சுறுசுறுப்பான விளையாட்டுப் பயிற்சியில் அன்றாடம் ஈடுபடுங்கள்.

* மாதத்தில் இருமுறை ஏகாதசி போன்ற நாட்களில் விரதம் மேற்கொள்ளுங்கள். அந்நாளில் பால், பழ உணவுகளை மட்டும் உண்ணுங்கள்.

* உண்மை மட்டும் பேசுங்கள். தேவையின்றி பேசாதிருக்கவும் பழகுங்கள். இனிமையும், கருணையும் பேச்சில் நிறைந்திருக்க வேண்டும்.

* எண்ணம், சொல், செயலால் யாருக்கும் துன்பம் தராதீர்கள். பேச்சிலும், செயலிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள். திறந்த மனதுடன் அனைவரிடமும் பழகுங்கள்.

* நியாயமான வழியில் பணம் சம்பாதியுங்கள். தவறான வழியில் கிடைக்கும் பணம், பொருள், மற்றவர்களின் ஆதரவு ஆகியவற்றை மறுக்கத் தயங்காதீர்கள். பெருந்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

* கடவுள் நம்பிக்கைஅற்றவர்கள், கீழான குணம் கொண்டவர்கள், பிறர் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுபவர்கள் ஆகியோரின் நட்பினைப் புறக்கணித்து விடுங்கள்.

* பிறருக்கு நல்லதை எண்ணுவதும், செய்வதும் மட்டுமே ஆன்மிகம். மனதில் சிறிதும் ஆணவம் கொள்ள கூடாது. சுயநலம் மறந்து பிறருக்கு இயன்ற அளவில் உதவி செய்ய விரும்புங்கள்.

* எப்போதும் கடவுள் சிந்தனையில் மனதைச் செலுத்துங்கள். குறைந்த பட்சம் காலையில் கண் விழிக்கும் போதும், இரவு தூங்கச் செல்லும் போதும் கடவுளை தியானிப்பது அவசியம்.

* உங்களது தேவைகளை குறைத்துக் கொள்ளுங்கள். இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

* பிறருடைய கருத்தில் நியாயம் இருந்தால் ஏற்றுக் கொள்ள தயங்காதீர்கள். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.

* எளிய வாழ்க்கை, உயரிய சிந்தனை இரண்டும் வாழ்வின் லட்சியமாக இருக்கட்டும் தேவைகளுக்குப் பிறரது உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் சுய காலில் எப்போதும் நிற்கப் பழகுங்கள்.

சொல்கிறார் இமயஜோதி






      Dinamalar
      Follow us