sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

சிவாலயத்தில் பெருமாள் கோயில்

/

சிவாலயத்தில் பெருமாள் கோயில்

சிவாலயத்தில் பெருமாள் கோயில்

சிவாலயத்தில் பெருமாள் கோயில்


ADDED : அக் 01, 2012 03:23 PM

Google News

ADDED : அக் 01, 2012 03:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பஞ்சபூதங்களில் பிருத்வி (மண்) தலம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில். சிவாலயமான இங்கு பெருமாளுக்கு தனிக்கோயில் உள்ளது. அதிலும் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. புரட்டாசிசனிக்கிழமைகளில் இந்தப்பெருமாளை வணங்கி வரலாம்.

தல வரலாறு:

உலக மக்களை நல்வழிப்படுத்தி உய்வு பெறச்செய்ய அம்பிகை முடி வெடுத்தாள். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமானால் தன்னை வருத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், கயிலாயத்தில் சிவன் யோக நிஷ்டையில் இருந்தபோது, அம்பாள் அவரது கண்களை மூட உலக இயக்கம் நின்றது. இதனால், அவரது சாபத்திற்குள்ளாகி பூலோகம் வந்தாள். மணலில் லிங்கம் வடித்து பூஜித்து வந்தாள். அவளை சோதிக்க சிவன் கங்கையை பூமியில் பாயவிட்டார். வெள்ளத்திலிருந்து லிங்கத்தைக் காக்க, அம்பிகை அதனை மார்போடு அணைத்துக் கொண்டாள். சிவன் அவளது பக்தியை மெச்சி மீண்டும் தன்னோடு ஐக்கியமாக்கிக் கொண்டார். மாமரத்தின் கீழ் எழுந்தருளிய அந்த மணல் லிங்கமே 'ஏகாம்பரநாதர்' என பெயர் பெற்றது. 'ஏகம்' என்றால் ஒன்று, 'ஆம்ரம்' என்றால் மாமரம். அம்பாள் அணைத்ததால் இவருக்கு, 'தழுவக்குழைந்தநாதர்' என்ற பெயரும் உண்டு.

கூம்புவடிவம்:

ஏகாம்பரநாத லிங்கம் கூம்பு வடிவில் உள்ளது. மணல் லிங்கம் என்பதால் அபிஷேகம் கிடையாது. ஆனால், பிற்காலத்தில் அமைக்கப்பட்ட ஆவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்படும். பாணத்தில் புனுகு பூசுகின்றனர். லிங்கத்தின் பின்புறம் சிவŒக்தி முருகன் இணைந்த சோமாஸ்கந்தர் இருக்கிறார். அம்பாளை ஏலவார்குழலி என்கின்றனர். தேவாரப்பாடல் பாடப் பெற்ற ஸ்தலம் இது

சிவாலயத்துக்குள் திவ்யதேசம்:

இந்தக்கோயிலுக்குள் பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்றான நிலாத்திங்கள் துண்டபெருமாள் கோயில் இருக்கிறது. பெருமாளின் நாபியில் (தொப்புள் கொடி) பூத்திருக்கும் தாமரையில் பிரம்மா இருப்பது வழக்கம். ஆனால், இங்கு மகாலட்சுமி இருப்பதாக ஐதீகம். புதுத்தொழில் துவங்குதல், பணியில் சேர்தல், பதவி பொறுப்பேற்றல் ஆகியவற்றுக்கு முன்பாக இவர்களை வணங்கினால் செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவரை வணங்கினால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

சடாரி ருத்ரபாதம்:

பெருமாள் கோயில்களில் அவரது திருவடி பொறித்த சடாரி ஆசிர்வாதம் செய்வதுபோல, இங்கு சிவன் பாதம் பொறித்த ருத்ர பாதத்தால் ஆசிர்வதிக்கின்றனர். ஆந்திர சிவன் கோயில்களில் இவ்வகை வழக்கம் உண்டு. சிவன், அம்பிகைக்கு திருவடி தரிசனம் கொடுத்ததன் அடிப்படையில் இவ்வாறு செய்கிறார்கள். உற்சவர் ஏகாம்பரநாதர் கண்ணாடி அறையில் 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தலின் கீழ் அருளுகிறார். கண்ணாடியில் சிவனின் எண்ணற்ற உருவங்களைத் தரிசிக்கலாம்.

கண்நோய்க்கு மருந்து:

சங்கிலிநாச்சியாரை மணந்து கொண்ட சுந்தரர், அவருக்கு தந்த வாக்குறுதியை மீறி திருவாரூர் சென்றதால் பார்வைஇழந்தார். இங்கு வந்து சிவன், அம்பிகையை வேண்டி பதிகம் பாடி ஒரு கண் பார்வை பெற்றார். கண்பார்வை தொடர்பாக பிரச்னை உள்ளவர்கள் இங்கு பதிகம் பாடிகுணம்பெற வேண்டிக்கொள்ளலாம்.

சிறப்பம்சம்:

சிவன் சந்நிதி பிரகாரத்தில் ஸ்படிக லிங்கமும், ஸ்படிக நந்தியும் உள்ளது. ராமபிரான் வழிபட்ட சகஸ்ரலிங்கம் பிரகாரத்தில் இருக்கிறது. நாயன்மார்களில் திருக்குறிப்புத்தொண்டர், சாக்கியர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் முக்தி பெற்ற தலம் காஞ்சிபுரம். சிவன் சன்னதி முன் மண்டபத்தில் இவர்கள் இருக்கின்றனர்.

பஞ்சபூதங்களில் இது பிருத்வி (மண்)ஸ்தலம் என்பதால், வீடு, கட்டடம் கட்டும் முன் இங்குள்ள மாவடிமூர்த்தி சந்நிதியில் மண் எடுத்துச்சென்றுஅஸ்திவாரத்தில் இட்டு பணியைத் துவக்குகின்றனர்.

இருப்பிடம்:

காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ.,

திறக்கும் நேரம்:

காலை 6- 12.30, மாலை 4- 8.30.

போன்:

044- 2722 2084.






      Dinamalar
      Follow us