/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி - சொல்கிறார் சாரதா தேவியார்
/
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி - சொல்கிறார் சாரதா தேவியார்
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி - சொல்கிறார் சாரதா தேவியார்
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி - சொல்கிறார் சாரதா தேவியார்
ADDED : மே 27, 2011 09:57 AM

* இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவு காலங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. அவனிடம் செலுத்தும் அன்பின் ஆழத்தைப் பொறுத்தே அவனை அறிகிறோம்.
* இறைவனின் திருவடிகளில் நம் உள் மனதிலுள்ள அனைத்து ஆசைகளையும் சமர்ப்பித்து விட வேண்டும். அதில், நமக்கு எது நல்லதோ அதை இறைவன் செய்வான். ஆனால், பக்தியையும் பற்றின்மையையும் மட்டும் இறைவனிடம் கேட்டுப் பெற வேண்டும். இதனை ஆசை என்று கூறமுடியாது.
* ஆசையை ஒரு நுண்ணிய விதைக்கு ஒப்பிடலாம். புள்ளியை விடச் சிறியதாக உள்ள விதை, பெரிய ஆலமரத்தை உண்டாக்கி விடுகிறது. ஆசை தற்காலிக இன்பம் தரலாம். அந்த இன்பத்தில் தான் துன்பம் பிறக்கிறது. ஆசைகளைத் துறப்பது ஆரம்பத்தில் துன்பமாக தோன்றலாம். ஆனால், துறந்துவிட்டால் நிரந்தர இன்பம் கிடைத்துவிடும். இன்பமும் ஆசையும் இருக்கும் வரை பிறவிகளைத் தவிர்க்க இயலாது. இதுதான் இறைவன் வகுத்த நியதி.
* மனிதன் குறுகிய அறிவு படைத்துள்ளான். அவனுக்குத் தேவையானது ஒன்று. ஆனால், அவன் கேட்பதோ மற்றொன்று.
* எவன் ஒருவன் கடவுளை மட்டுமே நேசிக்கிறானோ, அவன் அதிர்ஷ்டசாலி. இறைவனிடம் அன்பு செலுத்துவதால் துன்பமே ஏற்படுவதில்லை.
* பள்ளத்தை நோக்கிப் பாய்வது தண்ணீரின் இயற்கை. ஆனால், சூரியனது கிரணங்களோ அதை ஆவியாக்கி வானத்திற்கு எடுத்துச் செல்கிறது. அதைப்போல் கீழான பொருள்களைப் பற்றியும், களியாட்டத்திற்கு உரிய பொருள்களைப் பற்றியும், எண்ணுவது மனத்தின் இயல்பு, ஆனால், மேலேறும் நீர் போல, இறைவனின் கருணை
மற்றும் மனத்தை மேலான சிந்தனைக்குத் திருப்ப வேண்டும்.
* பல எண்ணங்களால் மனத்தைக் குழப்பிக் கொள்ளக்கூடாது. ஓர் எண்ணத்தைச் செயல்படுத்துவது மிகக் கடினம், அப்படியிருக்க, பல சிந்தனைகளினால்மனத்தை நிரப்பி அதனைச் சிதறியடிக்க கூடாது.
* அனைத்தும் மனத்தில் தான் இருக்கிறது. தூய்மை, தூய்மையின்மை இரண்டும் மனத்தில் தான் உள்ளது.
* உன் மனதில் குறைகள் இருந்தால் தான், மற்றவர்களும் குறைகள் <உள்ளவர்கள் போல் தோற்றமளிப்பார்கள். ஒருவனுடைய குறைகளை நீ கணக்கிடுவதால் அவனுக்கு ஏதும் நடக்கப் போவதில்லை. மாறாக, அது உனக்குத்தான் தீங்கு விளைவிக்கிறது, ஆதலால், நீ குறைகளின்றி நிறைவோடு இருக்க உன் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* எப்போதும் பிறருக்காக உன் கடமைகளைச் செய்து கொண்டிருப்பதுடன், இறைவன் மீதும் அன்பு செலுத்த வேண்டும். மாறாக, உலக அன்பு அதிக துன்பத்தையே அளிக்கும்.
* இறைவனைத் தவிர மற்றவற்றில் மனம் செல்லும் போது அவற்றின் நிலையாமையை நினைவில் கொள்ள வேண்டும். இறைவனின் புனிதத் திருவடிகளில் சரண் அடைய வேண்டும்.
* ஒருவர் வேலையே செய்யாமல் இருந்தால் அவருடைய மனம் ஆரோக்கியமாக இருக்க முடியாது. அதற்காக, 24 மணிநேரமும் இறை எண்ணத்திலும், தியானத்திலும் இருக்கவும் முடியாது. அதனால் அனைவரும் தங்கள் கடமையைச் செய்வதன் மூலம் மனத்தை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள முடியும்.

