sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

உச்சிக்கு செல்வதன் ரகசியம்

/

உச்சிக்கு செல்வதன் ரகசியம்

உச்சிக்கு செல்வதன் ரகசியம்

உச்சிக்கு செல்வதன் ரகசியம்


ADDED : மே 27, 2011 09:57 AM

Google News

ADDED : மே 27, 2011 09:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது செயல்களில் வெற்றி பெற்று, புகழேணியின் உச்சியை அடைவது எப்படி? படித்துப் பார்ப்போமா..

மேதைகளின் வரலாறை! சில இசைமேதைகள் இசையமைக்கும் பாடல்களை ரசித்துக் கேட்கிறோம். அவர்களின் கைகள் தாளவாத்தியங்களில் நர்த்தனமிடுவதைக் காணும்போது, ''ஐயோ! இதைப் போல் நமக்கு வாசிக்கத் தெரியவில்லையே என ஏங்குகிறோம். ஓவியர்களின் படங்களைப் பார்த்து, நம்மால் ஏன் இப்படி வரையமுடியவில்லை என ஆதங்கப்படுகிறோம். ஆனால், அவர்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் தான் உச்சத்துக்கு சென்றார்கள்.

* பிரபல ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ வரைந்த 'நியாயத் தீர்ப்பு' என்னும் ஓவியம் உலகில் தலைசிறந்ததாகக்

கருதப்படுகிறது. அதை வரைவதற்கு முன் அவர் 2000 தடவை ஸ்கெட்ச் வரைந்து பார்த்தாராம். அதை வரைந்து முடிக்க எடுத்த ஆண்டுகள் 8.

* லியனார்டோ டாவின்சியின் 'கடைசி விருந்து' ஓவியம் வரைய பத்தாண்டுகள் பிடித்ததாம். சில நுணுக்கமான பகுதிகளை வரையும் போது அவர் சாப்பாட்டையே மறந்து விடுவாராம்.

* கம்ப்யூட்டரில் 'மை டாக்குமென்ட்ஸ்' பகுதியை கிளிக் செய்தால், 'மை மியூசிக்' போல்டர் வரும். அதற்குள்

'பீத்தோவன் சிம்பொனி' இருக்கிறது. அதில் ஒலிக்கும் இனிய இசைக்கு சொந்தக்காரர் தான் பீத்தோவன். இவர் ஒரு பாட்டுக்கு இசையமைக்கும் முன், தனது நோட்சை 12 தடவைக்கு மேல் திருத்தி எழுதுவாராம்.

* ஜோசப் ஹெய்டன் என்ற இசையமைப்பாளர் 'திகிரியேஷன்' என்ற தனது இசை ஆல்பத்தை வடிவமைக்கும் முன் 800 தடவை இசையமைத்து மாற்றினாராம்.

* பியானோவில் புகழ்பெற்ற இக்னேஸ், பிரபலமான பிறகும் தினமும் ஆறுமணி நேரம் பயிற்சி எடுப்பாராம்.

''இசையில் மிளிர எனக்கு பொறுமையை கொடு இறைவா,'' என ஆண்டவனிடம் வேண்டுவாராம்.

ஆம்...பொறுமைசாலிகளே வாழ்வில் உச்சிக்கு செல்ல முடியும்.






      Dinamalar
      Follow us