sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

அமைதிக்கு பெயர் தான் சாந்தி

/

அமைதிக்கு பெயர் தான் சாந்தி

அமைதிக்கு பெயர் தான் சாந்தி

அமைதிக்கு பெயர் தான் சாந்தி


ADDED : பிப் 05, 2014 10:41 AM

Google News

ADDED : பிப் 05, 2014 10:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சத்தியத்தை விடாப்பிடியாய் பிடித்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் எதிரியின் மனதைக் கூட மாற்றும் சக்திகிடைக்கும். ஆனால், இதற்கு அசைக்க முடியாத நம்பிக்கை அவசியம்.

* கடவுளிடம் முழுமையாக சரணடைந்தால் மட்டுமே, அகில உலகத்தையும் தன்னுள் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உண்டாகும்.

* இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவினால் மட்டும் போதாது. ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவமும் உண்டாக வேண்டும்.

* மனிதனுக்கு ஒழுங்கும், கட்டுப்பாடும் மிகவும் அவசியமானவை.

* ஒவ்வொரு வீட்டாரும் ஒரு பிடி தானியத்தை தர்மம் செய்ய வேண்டும். அதையும் வீட்டிலுள்ள சிறு குழந்தைகளின் கையால் அளிக்க வேண்டும்.

* கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். அவர் இல்லாத இடமே இல்லை.

* தனிமையில் குகையில் அமர்ந்து தவம் செய்வதை விட, பலர் சேர்ந்து கூட்டாக கடவுளை வழிபடும் முறையே மேலானது.

* ஆண்களைத் தீய வழியில் ஈடுபடாமல் தடுத்து நிறுத்தும் சக்தி பெண்களுக்கு இருக்கிறது.

* உலகம் எங்கும் சாந்தி நிலவ வேண்டும் என நாம் பிரார்த்திப்போம். உலக அமைதியை விரும்பும் வீரர்களும், சேவையாற்றும் தொண்டர்களும் மிகவும் தேவை.

* பக்தி மார்க்கத்தில், குருட்டுத்தனமான நம்பிக்கை கள் மலிந்திருப்பது வருத்தத்திற்குரியதாகும்.

* யாரையும் இம்சிக்காமல் அகிம்சை வழியில் உயிர் வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை.

* தியானம் செய்து கடவுளை வழிபடுவதே சிறந்த வழிபாடு.

* ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே திறமை அதிகம். ஒரு செயலை ஏற்றுக் கொண்டால், அதை எப்பாடு பட்டாவது முடித்துவிடும் தகுதி அவர்களுக்கு உண்டு.

* சத்தியத்தை வற்புறுத்துவதன் மூலம் யாரிடமும் திணிக்க முடியாது. சத்தியத்தை யாராலும் மறைக்கவும் முடியாது.

* அறிவுக்கண் திறக்கும் வரை சத்தியத்தை யாராலும் <உணர முடிவதில்லை.

* தாய்மைப்பண்பு இருப்பதால், பெண் குலத்திற்கே தயை, அன்பு, கருணை, பாசபந்த உணர்வுகள் அதிகமாக இருக்கிறது.

* கருணை என்பது பேராற்றல் மிக்க குணம். கடவுள் உணர்வு உள்ளவனிடம் உள்ளத்திலிருந்து கருணை பொங்கி வழியும்.

* உலக மக்களின் உள்ளத்தில் எல்லாம் அச்சம் மண்டிக் கிடக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

* சூரியன் பாரபட்சம் இல்லாமல், எப்படி எல்லோருக்கும் தன் உஷ்ணத்தையும், ஒளியையும் வழங்குகிறதோ, அதுபோல அனைவரையும் சமமாக நடத்துபவனே அகிம்சாவாதி.

* பொருளைத் திருடினால் திருடன் என்று உலகம் கருதுகிறது. அதுபோல, பொருளைக் குவித்து வரும் செல்வந்தனும், தன்னிடம் இருப்பதை பிறருக்கு கொடுக்க மறுக்கும் கருமியையும் திருடனாகவே கருதப்பட வேண்டும்.

* பிறருக்கு கொடுத்து மகிழ்வதில் தான் உண்மையான இன்பம் இருக்கிறது. அதனால், நம்முடைய செல்வமும் பெருகும். தன்னுடையது என்று உரிமை கொண்டாடும் எண்ணத்தால் துன்பமே உண்டாகும்.

சொல்கிறார் வினோபாஜி






      Dinamalar
      Follow us