sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தேவியருடன் சூரியநாராயணர்

/

தேவியருடன் சூரியநாராயணர்

தேவியருடன் சூரியநாராயணர்

தேவியருடன் சூரியநாராயணர்


ADDED : ஜன 10, 2020 09:39 AM

Google News

ADDED : ஜன 10, 2020 09:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோவிலில் மூலவராக சூரியநாராயணர் மனைவியருடன் அருள்பாலிக்கிறார்.

முனிவரான காலவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. நவக்கிரகங்களை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றதோடு, நலத்துடன் வாழும் வரத்தையும் பெற்றார். இதையறிந்த பிரம்மா, ''நவக்கிரகங்களே! சிவனின் ஆணைப்படி எல்லா உயிர்களுக்கும் பாவ, புண்ணிய பலனை மட்டும் வழங்கக் கட்டளையிட்டிருந்தேன். ஆனால் முனிவருக்கு வரம் தரும் அளவுக்கு உரிமை எடுத்துக் கொண்டீர்கள். முனிவருக்கு வந்த தொழுநோய் உங்களுக்கு வரட்டும்'' எனச் சாபமிட்டார்.

இதிலிருந்து விமோசனம் பெற பூலோகத்திலுள்ள எருக்கு வனம் ஒன்றில் தங்கி சிவனை பூஜித்தனர். காட்சியளித்த சிவன், நோயைப் போக்கியதோடு, இத்தலத்திலேயே தங்கி அருள்புரிய ஆணையிட்டார். இதனடிப்படையில் நவக்கிரகக் கோயில் கட்டப்பப்பட்டது. இங்கு சூரியன் மூலவராக இருப்பதால் சூரியனார் கோயில் என பெயர் பெற்றது.

இந்தியாவில் இரு இடங்களில் சூரியக்கோயில் உள்ளது. ஒடிசாவிலுள்ள கோனார்க், தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோயில். கோனார்க்கில் வழிபாடு இல்லை. ஆனால் சூரியனார் கோவிலில் மூலவராக. மேற்கு நோக்கி நிற்கும் உஷா, பிரத்யுஷா தேவியுடன் திருமணக் கோலத்தில் இருக்கிறார். செந்தாமரை மலர்கள் ஏந்திய இவரை சூரிய நாராயணர் என்றும் அழைக்கின்றனர். குதிரை வாகனமாக உள்ளது. சூரியனின் உக்கிரத்தை போக்கும் விதமாக எதிரில் குருபகவான் இருக்கிறார்.

ஞாயிறன்று விரதமிருந்து சுவாமியை தரிசிப்பது நல்லது. தொடர்ந்து 12 ஞாயிற்றுக்கிழமை தரிசித்தால் கிரகதோஷம் நீங்கும். இங்கு தரிசிப்பவர்கள் அருகிலுள்ள திருமங்கலக்குடி பிராணநாதர், மங்கள நாயகியையும் வழிபடுகின்றனர். சூரிய திசை, சூரிய புத்தி நடப்பவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.

நவக்கிரகங்களின் நிலை

சூரியன் - மூலவராக தேவியருடன் மணக்கோலம்

சந்திரன் - கையில் குமுதமலர் வைத்துள்ளார்.

அங்காரகன் - அபய ஹஸ்த (ஆசி வழங்கும்) நிலை

புதன் - அபயஹஸ்த நிலை

குரு - சூரிய சந்நிதி எதிரே அருள் கோலம்

சுக்கிரன் - அபயஹஸ்த நிலை

சனி - காக வாகனம் இல்லாமல் நின்ற கோலம்

ராகு - பாதி அளவு செய்யப்பட்ட பலிபீடத்தில் உள்ளார்.

கேது - அஞ்சலி ஹஸ்த (வணங்கிய) நிலை.

எப்படி செல்வது : கும்பகோணத்தில் இருந்து 24 கி.மீ.,

விசஷே நாட்கள்: பொங்கல், ரதசப்தமி உற்ஸவம், ஆடி கடைசி செவ்வாய், ஆவணி ஞாயிறு, கார்த்திகை சோமவாரம். தை அஷ்டமி, மாசி சிவராத்திரி

நேரம் : காலை 6:00 - பகல்11:00 மணி, மாலை 4:00 - இரவு 8:00 மணி

தொடர்புக்கு: 0435 - 2472 349

அருகிலுள்ள தலம்: கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் (12 கி.மீ.,)






      Dinamalar
      Follow us