sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நெருங்கி விட்டது தேர்வு பெற்றோரே புறப்படுங்க!

/

நெருங்கி விட்டது தேர்வு பெற்றோரே புறப்படுங்க!

நெருங்கி விட்டது தேர்வு பெற்றோரே புறப்படுங்க!

நெருங்கி விட்டது தேர்வு பெற்றோரே புறப்படுங்க!


ADDED : பிப் 23, 2016 11:22 AM

Google News

ADDED : பிப் 23, 2016 11:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேர்வு நெருங்கும் வேளையில் தங்கள் குழந்தைகள் சிறப்பான மதிப்பெண் பெற தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை கைலாசநாதர் கோவிலுக்கு பெற்றோர் சென்று வரலாம். நவகைலாய தலங்களில் இது கல்விக்குரிய புதன் ஸ்தலம் ஆகும்.

தல வரலாறு: அகத்தியரின் சீடர் உரோமசர் தாமிரபரணி கரையில் சிவலிங்க வழிபாடு செய்ய விரும்பினார். அதற்கு தகுதியான இடம் எது என தன் குருவிடம் ஆலோசனை கேட்டார். அகத்தியர் அவரிடம், 'நீ தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை மிதக்க விடு. அந்த மலர்கள் எங்கெல்லாம் ஒதுங்குகிறதோ, அங்கெல்லாம் சிவலிங்கம் வடித்து வழிபாடு செய்,'' என்றார். அந்த மலர்கள் ஒன்பது இடங்களில் ஒதுங்கின. அதில் ஏழாவது மலர் கரை ஒதுங்கிய தலம் இது. இங்குள்ள சிவனுக்கு கைலாசநாதர் என்பது திருநாமம். சிவலிங்கத்தின் பீடம் தாமரை போல வடிக்கப்பட்டுள்ளது சிறப்பு.

வழிபாட்டு முறை: மாணவர்கள் கல்வியில் சிறப்பிடம் பெற சுவாமிக்கு பச்சை நிற வஸ்திரம் சாத்தி, பாசிப்பயறு மற்றும் சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். இங்கு அம்பாள் அழகியபொன்னம்மை கிழக்கு நோக்கியிருக்கிறாள்.

குதிரை வாகனத்தில் கிரகங்கள்: சூரியனுக்குரிய வாகனம் குதிரை. ஆனால் இங்குள்ள நவக்கிரக சன்னிதியில் சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய நால்வரும் குதிரை வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் வித்தியாசமான அமைப்பை தரிசிக்கலாம். குருவும், சுக்கிரனும் எட்டு குதிரைகள் பூட்டிய தேரிலும், சூரியன் ஏழு குதிரைகள் மற்றும் சந்திரன் 10 குதிரைகள் பூட்டிய தேரிலும் காட்சியளிக்கின்றனர். பிரகாரத்தில் உள்ள சுப்பிரமணியர், திருச்செந்தூர் முருகனைப்போல வலதுகையில் தாமரை மலருடன் காட்சி தருகிறார்.

இவருடன் வள்ளி, தெய்வானை இருக்கின்றனர். சனி பகவானுக்கு தனி சன்னிதி உள்ளது.

கொம்பு தேங்காய்: ஆங்கிலேய கலெக்டராக இருந்த கேப்டன் துரை ஒருசமயம், இவ்வூருக்கு வந்தார். ஒரு சாவடியில் (கிராம அலுவலகம்) தங்கியிருந்த அவர் இளநீர் கொண்டு வரச் சொன்னார். கலெக்டரின் சேவகர், தென்னந்தோப்பிற்கு சென்று இளநீர் கேட்டார்.

அங்கிருந்த விவசாயி, 'இந்த தோப்பில் உள்ள இளநீர்கள் சுவாமி கைலாசநாதரின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தக் கூடியது. இதை தனிநபருக்கு தர முடியாது,'' என சொல்லிவிட்டார். கேப்டன் துரை கோபத்துடன் தோப்பிற்கு சென்று விவசாயியிடம், 'சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் இளநீர் என்றால், அதற்கென்ன கொம்பா முளைச்சிருக்கு? சும்மா பறிச்சு போடு,'' என்று அதட்டினார்.

கலெக்டரின் கோபம் கண்ட விவசாயி பயத்தில் ஒரு இளநீரை பறித்துப் போட்டார். என்ன ஆச்சர்யம்! அந்த இளநீரில் மூன்று கொம்பு முளைத்திருந்தது. கலெக்டர் பயந்து விட்டார். உடனே கோவிலுக்குச் சென்று கைலாசநாதரிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் தினசரி பூஜைக்காக, ஆறரை துட்டு எனப்பட்ட 26 சல்லி பைசாவை காணிக்கையாக வழங்கினார். இந்த தேங்காய் தற்போதும் இக்கோவிலில் இருக்கிறது. இதில் இருந்த ஒரு கொம்பு ஒடிந்து இரண்டு கொம்புகளுடன் உள்ளது.

சிறப்பம்சம்: இங்குள்ள நந்திக்கு தலைப்பாகை கட்டி அலங்காரம் செய்வது விசேஷம். இவ்வூரில் உள்ள மகரநெடுங்குழைக்காதர் (பெருமாள்) கோவில் நவதிருப்பதிகளில் ஒன்றாகும். இப்பெருமாள் கோவில் சுக்கிரனின் அம்சத்தை கொண்டது. சுக்கிரனும் புதனும்

சேர்ந்திருக்கும் ஊர் என்பதால் இங்கு வந்து பெருமாளையும், கைலாசநாதரையும் வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும், மாணவர்களின் கல்வித்திறன் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

இங்குள்ள கால பைரவர் ஆறு கைகளில் ஆயுதம் ஏந்தியுள்ளார். இத்தலத்து சிவனே வேதத்தின் அம்சமாக கருதப்படுவதால் பைரவருடன் நாய் வாகனம் இல்லை. பவுர்ணமி மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. இங்கு வல்லப விநாயகர், சக்தி விநாயகர், கன்னிமூல கணபதி, சித்தி விநாயகர் என நான்கு விநாயகர்களை தரிசிக்கலாம். பெரிய கோட்டையை உடைய ஊரை 'பேரை' என்பார்கள். இவ்வூர் தமிழகத்தின் தெற்கே இருப்பதால் 'தென்திருப்பேரை' என்று பெயர் பெற்றது.

இருப்பிடம்: திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலை 38 கி.மீ., தூரத்தில் தென்திருப்பேரை. பஸ் ஸ்டாப்பிலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோவில்.

நேரம்: காலை 7.00- 11.00 மணி, மாலை 5.00- 8.00 மணி.

அலை/ தொலைபேசி: 98945 52943, 04639 -272 233.






      Dinamalar
      Follow us