sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மலர்கள் நனைந்தன பனியாலே நம் மனதும் குளிர்ந்தது நிலவாலே! - ஸ்ரீஅன்னை அன்பை போதிக்கிறார்

/

மலர்கள் நனைந்தன பனியாலே நம் மனதும் குளிர்ந்தது நிலவாலே! - ஸ்ரீஅன்னை அன்பை போதிக்கிறார்

மலர்கள் நனைந்தன பனியாலே நம் மனதும் குளிர்ந்தது நிலவாலே! - ஸ்ரீஅன்னை அன்பை போதிக்கிறார்

மலர்கள் நனைந்தன பனியாலே நம் மனதும் குளிர்ந்தது நிலவாலே! - ஸ்ரீஅன்னை அன்பை போதிக்கிறார்


ADDED : பிப் 18, 2011 10:54 AM

Google News

ADDED : பிப் 18, 2011 10:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிப்.21 ஸ்ரீ அன்னை அவதார தினம்

* நாம் விரும்பியதை கடவுள் தரமாட்டார், நம் தகுதிப்படியே தான் அவர் அருள்புரிகிறார். கடவுளின் அருளுக்கு எப்போதும் நம்மை பாத்திரமாக்கிக் கொள்ள வேண்டும்.

* இறைவனின் சக்தியே நம்மை இயக்குகிறது என்பதை எண்ணத்திலும் உணர்விலும் ஏற்படுத்திக் கொள்ளத் தவறக்கூடாது. இதற்கு அடிப்படையானது தீவிரமான ஆர்வமாகும்.

* இறைவன் மீது செய்யப்படும் பிரார்த்தனையில் உறுதியில்லாமல் போனால், எதுவுமே இல்லாமல் போய்விடும் என்பதை மறக்கக்கூடாது.

* பூத்துக் குலுங்கும் மலர்களே நேசத்தின் பிரதிபலிப்பாகும். இரவெல்லாம் நிலவொளியில் பெய்த பனியில் நனைந்த மலர்கள் நம் மனதையும், கண்களையும் குளிர்விக்கின்றன. சூரியனின் ஒளிக்கரங்களின் பரிசத்தால் மொட்டவிழ்ந்து நிற்கும் ரோஜா மலரை பார்க்கும் போது அது நம்மை நேசிப்பது போன்று தோன்றும். அம்மலர் தன்னுடைய அழகை நமக்கு அள்ளித்தருவது ஒரு வகை நேசமாகும். அந்த மலர்கள் அழகைப் பொழிவது போல அன்பைப் பொழியக் கற்றுக் கொள்வோம்.

* மழைத் துளிகள் மண்ணில் விழுந்தவுடன், மழைக்கு நன்றி கூறும் வகையில் பூமியிலிருந்து வண்ணக்கரங்கள் வெளிப்படுகின்றன. அவையே தேவதைக்கு ஒப்பான அல்லிப்பூக்கள். அம்மலர்கள் இறைவனை வழிபடுவது போன்றே நமக்கு தோன்றுகின்றன.

* கரங்களை எதிரிகளிடம் நீட்டாமல் அவர்களிடம் அப்பழுக்கில்லாமல்ல நடந்து கொள்வதுடன், நேர்மை, நியாயத்தின் அடக்கமான வீரத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கினால் வெற்றி நம் அருகில் வரும்.

* மனம் ஒரு 'பாலீஷ்' செய்யப்பட்ட நிலைக்கண்ணாடி. தூய்மையாக வைத்துக் கொள்வதும், தூசு படியாமல் வைத்துக் கொள்வதும் நமது தொடர்ச்சியான பணியாகும்.

* சத்தியத்தின் இருப்பிடம் தான் இறைவன் இருக்குமிடம். சத்தியத்தையும் உண்மையையும் கடைப்பிடிப்பவனிடமே கடவுள் அருள் பரிபூரணமாய் இருக்கும்.

* இதுநாள் வரை இப்படி இருந்தோமே என்ற குழப்பத்திற்கு ஆளாகாமல் 'இன்று முதல்

இப்படி மாறுவோம்' என்ற ஆர்வத்துடன் அமையும் சிந்தனையே ஆனந்தமானது.

* மலரின் உண்மைப் பண்புகளைப் பெறுபவன் மகிழ்ச்சியானவன், மலர்களின் உன்னதப் பண்புகளை வளர்த்துக் கொள்ள அனைவரும் முயற்சி செய்யுங்கள்.

* விடாமுயற்சியுடன் உறுதியுடன் நீடித்து, சற்றும் தளராத போராட்டமாக தொடர்ந்து மேற்கொண்டால் பாறாங்கல் போன்ற பெரிய தடைகளும் தகர்ந்து பொடிப் பொடியாகி விடும்.

* மலர்கள் இயற்கை அன்னையின் எழில்மிகு வடிவங்கள், நம் கண்களுக்கும், கருத்திற்கும் விருந்து படைக்க அர்ப்பணிக்கப்பட்ட தியாகச் சுடர்கள். நம்மை மகிழ்விக்க மட்டும் மலர்கள் படைக்கவில்லை, அவை நமக்கு அறிவிக்கும் ஆன்மிகங்கள், வேதங்கள், விளக்கங்களாக உள்ளன.

* தன்னம்பிக்கையாளர்கள் நேர்மையுடன் பிரார்த்தித்து விரும்பியதை இறைவனிடம் பெறுகின்றனர். நேர்மையுடன் இருப்பதும், தன்னைச் செம்மைப்படுத்திக் கொள்வதும், நேர்மையை வளர்த்துக் கொள்வதும் நிறைவான தூய்மையாகும். நேர்மையுடன் இருப்பது போல் பாசாங்கு செய்ய கூடாது.

* ஆசிரியர் பாடம் கற்பிப்பவரோ, வேலை வாங்குபவரோ இல்லை, உதவி செய்வதுடன் வழிகாட்டுபவராகவும் உள்ளார்.






      Dinamalar
      Follow us