sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நாமெல்லாம் தொழிலாளி

/

ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நாமெல்லாம் தொழிலாளி

ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நாமெல்லாம் தொழிலாளி

ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நாமெல்லாம் தொழிலாளி


ADDED : பிப் 10, 2017 11:36 AM

Google News

ADDED : பிப் 10, 2017 11:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிப்.18 ராமகிருஷ்ணர் பிறந்த தினம்

* உலகின் முதலாளியாக கடவுள் ஒருவரே இருக்கிறார். நாம் அவருக்கு பணிவிடை செய்யும் ஊழியர்களாக இருக்கவே இந்த மண்ணில் பிறந்திருக்கிறோம்.

* பூமியின் நான்கு திசைகளிலும் பயணம் செய்தாலும் உண்மையான தர்மத்தை எங்கும் காண முடியாது. இருப்பது எல்லாம் உங்களின்

உள்ளத்திலேயே இருக்கிறது.

* வீடு கட்டும் போது சாரம் அவசியம். கட்டி முடித்த பின் அது தேவை இல்லாமல் போய்விடும். அதுபோல பக்தியின் தொடக்கத்தில் சிலை வழிபாடு அவசியம். பக்தியில் பக்குவம் அடைந்தபின் அது தேவையில்லை.

* அன்றாடப் பணிகளில் ஈடுபட அதிகாலைப் பொழுது பொருத்தமானது. மனிதன் ஆன்மிக வழியில் மனதைச் செலுத்த இளமைப்பருவம் பொருத்தமானது.

* கடின உழைப்பும், முயற்சியும் உள்ளவனுக்கு எல்லாமே கிடைக்கும். இந்தப் பண்புகள் இல்லாவிட்டால், உலகில் ஒன்றுமே கிடைக்காது.

* எல்லா மனிதர்களிடமும் கடவுள் இருக்கிறார். ஆனால் கடவுளிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. இதுவே வாழ்வில் துன்பம் உண்டாகக் காரணம்.

* உங்களுடைய வழிபாட்டு முறைகளில் ஆழ்ந்த பற்றும், நம்பிக்கையும் கொண்டிருங்கள். ஆனால் மற்றவர் மீது வெறுப்பு சிறிதும் கொள்வது கூடாது.

* கடவுளை வெளியுலகில் தேட வேண்டாம். அவர் நமக்குள் இருப்பதை உணர்வதே அறிவு. இந்த உண்மையை அறிந்தவர்கள் உலகத்தோடு ஒட்டி உறவாடி ஒற்றுமையை நிலைநாட்டுவர்.

* பிறருடைய குற்றம், குறைகளில் மனதைச் செலுத்துபவன் காலத்தை வீணாக்குகிறான். தன்னுடைய குறைகளைத் திருத்திக் கொள்பவன் வாழ்வைப் பயனுள்ளதாக்குகிறான்.

* உலகின் மூலமாக இருக்கும் ஒன்றைத் தெரிந்து கொண்டால் போதும். பிறகு எல்லாம் தெரிந்து விடும். ஒன்று என்னும் இலக்கத்துடன் சேரும் பூஜ்யமும் மதிப்பு பெறுவது போல கடவுளை அறிந்தால் தான் மனிதனுக்கே மதிப்பு.

* பழுத்த மரம் கனிகளைச் சுமப்பதால் எப்போதும் தாழ்ந்து நிற்கும். மனிதனும் மதிப்புடன் வாழ வேண்டுமானால் பணிவுள்ளவனாக இருக்க வேண்டும்.

* பணம் யாருக்கு அடிமையோ, அவனே உண்மையான மனிதன். பணத்தால் உணவு, உடைகளைப் பெற முடியுமே தவிர ஞானத்தை வாங்க முடியாது.

* அதிகம் படித்தவன் விவாதம் செய்வதில் ஈடுபாடு கொள்கிறான். மனதை கடவுளிடம் ஒருமுகப்படுத்தியவன் பேச்சை விட செயலையே மதிக்கிறான்.

* கடவுள் மனிதனை எண்ணத்தின் அடிப்படையில் மட்டுமே காண்கிறார். அவரவர் எண்ணத்திற்கு ஏற்பவே கடவுளின் அருளும் வெளிப்படுகிறது.

* படிப்பதை விட கேள்வி கேட்பது சிறந்தது. கேட்பதை விட நேரில் காணும் அனுபவம் உயர்ந்தது.

* தீர்த்த யாத்திரை சென்று திரும்பிய பிறகும் மனம் பக்தியில் ஈடுபடாவிட்டால், யாத்திரை சென்றதால் ஒருபயனும் உண்டாகவில்லை என்றே பொருள்.

சொல்கிறார் குருதேவர்






      Dinamalar
      Follow us