sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

சத்தியம் எங்கள் வேதம்! சமத்துவம் எங்கள் கீதம்!

/

சத்தியம் எங்கள் வேதம்! சமத்துவம் எங்கள் கீதம்!

சத்தியம் எங்கள் வேதம்! சமத்துவம் எங்கள் கீதம்!

சத்தியம் எங்கள் வேதம்! சமத்துவம் எங்கள் கீதம்!


ADDED : ஏப் 01, 2018 04:38 PM

Google News

ADDED : ஏப் 01, 2018 04:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிறப்பால் உயர்வு, தாழ்வு கருதும் நாடு தன் மதிப்பை இழக்கும். அதனால், 'மக்கள் அனைவரும் சமம்' என்னும் சத்தியத்தை ஒருபோதும் மறவாதீர்கள்.

* ஒவ்வொருவரும் துாய்மையாக வாழ்ந்தால் நாட்டிற்கு எந்த கேடும் வராது.

* நோய் இல்லாத மக்கள் வாழும் நாடு தவம் செய்த பூமி.

* மக்களுக்கு படிப்பினை தருவது கலை. அதன் மூலம் கீழான உணர்ச்சிகளை துாண்டக் கூடாது.

* தாயின் உள்ளத்தில் இல்லாத கடவுள் வேறு எங்கே இருக்கிறார். அவருக்கு சேவையாற்றுவது நம் கடமை.

* கேட்ட வரம் அனைத்தும் தரும் கற்பக மரம் போல இளமையில் கற்கும் கல்வி வாழ்வில் துணை புரியும்.

* பணக்காரர்கள் மற்றவர்களை துன்புறுத்தக்கூடாது. ஏனெனில் மக்கள் அனைவரும்

கடவுளின் பிள்ளைகள்.

* பிறருக்காக வாழ்வதில் தான் உண்மையான அமைதி இருக்கிறது. அந்த இடத்தில் தான் ஆன்மிகம் வாழ்கிறது.

* ஒழுக்கம் உள்ள இடத்தில் தெய்வம் குடியிருக்கும். ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள் மட்டுமே, இறைவன் கொடுத்த பணியை சரியாக செய்பவர்களாக இருப்பர்.

* இறைவன் அளித்த உடலை நல் வழியில் பயன்படுத்தாவிட்டால் அது தானாகவே அழிய தொடங்கி விடும்.

* ஆன்மிகம் ஒன்றே இந்த வாழ்வையும் துாய்மைப்படுத்தி, மறு உலக வாழ்விற்கும் நல்வழி காட்டுகிறது.

முழங்குகிறார் திரு.வி.க.,






      Dinamalar
      Follow us