/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
சிறுநீரக நோய் தீர்க்கும் ஊட்டத்தூர் நடராஜர்
/
சிறுநீரக நோய் தீர்க்கும் ஊட்டத்தூர் நடராஜர்
ADDED : மார் 12, 2020 02:44 PM

சிறுநீரக நோய் தீர திருச்சி ஊட்டத்துார் நடராஜருக்கு வெட்டிவேர் மாலையை சாத்துங்கள்.
ராஜராஜச்சோழன் காலத்தில் இந்த பகுதி வில்வமரக் காடாக இருந்தது. அரண்மனை பணியாளர்கள் இப்பகுதியில் கோயில் கட்டுவதற்காக இடத்தை தேர்வு செய்ய புதர்களை செதுக்கினர். குறிப்பிட்ட இடத்தில் ரத்தம் பீறிட்டு எழவே, அங்கு சிவலிங்கம் இருப்பதைக் கண்டனர். அந்த இடத்தில் கோயில் அமைத்து சுவாமிக்கு சுத்த ரத்தினேஸ்வரர் என பெயரிட்டனர். இங்குள்ள அம்மன் அகிலாண்டேஸ்வரி எனப்படுகிறாள்.
மாசி 12,13,14 நாளிலும் வைகாசி விசாகத்தன்றும் காலை நேரத்தில் சூரியக் கதிர்கள் சிவனின் மீது விழுகிறது.
இங்குள்ள கோரைப்பல் துர்க்கையை தரிசித்தால் பயம் விலகும். கொடிமரத்தின் மேல் விதானத்தில் 27 நட்சத்திரங்கள், 15 திதிகள், 12 ராசிகள், நவக்கிரகங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. பிரதோஷ நாளில் வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும். தட்சிணாமூர்த்தி சன்னதியில் 'ஓம் நமசிவாய' என்று ஜபித்தால் கிரக தோஷம் நீங்கும்.
இங்குள்ள நடராஜர் 'பஞ்சநதனம்' என்னும் கல்லால் ஆனவர். சிறுநீரக நோய்கள் தீரவும், இழந்த பதவியைப் பெறவும் இவருக்கு வெட்டிவேர் மாலை சாத்துகின்றனர். ஒரு கிலோ வெட்டிவேரை 48 துண்டாக்கி, அதை மாலையாக தொடுத்து சுவாமிக்கு அணிவிக்க வேண்டும். பிரசாதமாக வெட்டிவேர் மாலையை தருவர். கோயிலின் நடுவே உள்ள பிரம்ம தீர்த்தத்தை தேவையான அளவு வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். தினமும் ஒரு துண்டு வெட்டிவேரை ஒரு டம்ளர் தீர்த்தத்தில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து 48 நாள் செய்தால் சிறுநீரகக் கோளாறுகள் மறையும். பெண்கள் வீட்டு விலக்காகும் நாட்களில் குடிக்கக் கூடாது.
எப்படி செல்வது: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 30 கி.மீ., துாரத்தில் பாடாலுார். அங்கிருந்து புள்ளம்பாடி செல்லும் வழியில் 5 கி.மீ.,
விஷேச நாட்கள்: வைகாசி சுவாதியில் தேரோட்டம், ஆருத்ரா தரிசனம், மகாசிவராத்திரி
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 97880 62416, 83449 11836
அருகிலுள்ள தலம்: திருப்பட்டூர் பிரம்மா கோயில் 14கி.மீ.,