sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

வாஸ்து தோஷம் நீங்க பஞ்சமியில் வழிபடுங்க!

/

வாஸ்து தோஷம் நீங்க பஞ்சமியில் வழிபடுங்க!

வாஸ்து தோஷம் நீங்க பஞ்சமியில் வழிபடுங்க!

வாஸ்து தோஷம் நீங்க பஞ்சமியில் வழிபடுங்க!


ADDED : ஜூன் 08, 2016 12:00 PM

Google News

ADDED : ஜூன் 08, 2016 12:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரத்வாஜ மகரிஷி வழிபட்ட சிவன் திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி ஒடுக்கம் தவசிமேடையில் மகாலிங்கேஸ்வரராக அருள்புரிகிறார். வாஸ்து தோஷம் நீங்க பஞ்சமி திதிகளில் இங்கு வழிபடுவது சிறப்பு.

தல வரலாறு: சீதையை மீட்டு அயோத்தி புறப்பட்ட ராமர், வழியில் தேவகுருவின் புத்திரரான பரத்வாஜ மகரிஷியைச் சந்தித்தார். அவரது உபசரிப்பை ஏற்ற ராமர், தன்னுடன் வந்திருந்த ஆஞ்சநேயருக்கு நன்றி செலுத்தும் விதத்தில் உணவு பரிமாறிய இலையின் நடுவில் ஒரு கோடு போட்டார். அதிலிருந்த உணவையும் ஆஞ்சநேயர் உண்ணும்படி பணித்தார். இந்த நிகழ்விற்குப் பிறகு, வாழை இலையின் நடுவில் கோடு வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்று கூறுகிறது. இதற்கு காரணமான பரத்வாஜர் வழிபட்ட சிவன் மகாலிங்கேஸ்வரர் என்னும் பெயருடன் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். மதுரையில் மீனாட்சியம்மனைப் பிரதிஷ்டை செய்த ஐந்து முனிவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மீனாட்சிக்கு 'பஞ்சராஜ மாதங்கி' என்றொரு பெயரும் உண்டு.

இரு அம்பிகை: சிவராத்திரியை ஒட்டிய 30 நாட்களும் சூரியஒளி மூலவர் சிவன் மீது படும். காலையில் சூரிய ஒளி சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு. பொதுவாக, ஒரு சன்னிதியில் ஒரு அம்பிகை இருப்பது வழக்கம். ஆனால், இங்கு ஒரே சன்னிதியில் இரு அம்பிகையர் வீற்றிருப்பது சிறப்பு. கோவில் முகப்பில் இரு பீடங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க வரும் அடியவர்களின் பாதம், தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜரே பீடமாக இக்கோவிலில் இருப்பதாகச் சொல்வர்.

ஒடுக்கம் தவசிமேடை: பரத்வாஜர் ஒரு தவமேடையில், யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை வழிபட்டார். இதனால் இத்தலத்திற்கு, 'ஒடுக்கம் தவசி மேடை' என்ற பெயர் ஏற்பட்டது. அளவில் சிறிய இக்கோவிலில், மகாலிங்கேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவருக்கு வலது பக்கத்தில் உள்ள சன்னிதியில் மரகதவல்லி, மாணிக்கவல்லி என்ற இரண்டு அம்பிகையர் காட்சி தருகின்றனர். மதுரையில் அருளும் மீனாட்சியம்மனின் பெயரால் இவர்களுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. இச்சா சக்தி, கிரியா சக்தியாக அருள்பாலிக்கும் இந்த அம்பிகையரை வழிபட்டால், ஞான சக்தியான இறைவனை எளிதில் அடையலாம் என்பதை உணர்த்தும் விதத்தில் உள்ளனர்.

ஆதி பைரவர்:சிவாலயங்களில் வடகிழக்கு மூலையான ஈசான திசையில் காட்சி தரும் பைரவர், இங்கு சிவனுக்கு எதிரில் காட்சியளிக்கிறார். இங்கு அருளும் மகாலிங்கேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதால், இவரது உக்ரம் பக்தர்களைத் தாக்காமல் இருக்க, எதிரில் பைரவரை பிரதிஷ்டை செய்துள்ளனர். இவரை 'ஆதி பைரவர்' என்கின்றனர். பைரவருக்குப் பின்புறம் தலைக்கு மேலே சிறிய துளை ஒன்றுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் முதலில் இந்த துளை வழியாக, சிவனை தரிசித்து விட்டு, பின்பு பைரவரை வணங்கி, அதன் பின்பு கோவிலுக்குள் செல்கின்றனர்.

வாஸ்து கோவில்: பரத்வாஜர் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், மாதம் தோறும் மகம் நட்சத்திரத்தில் இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது. மாசி மகத்தன்று சிவன், அம்பாளுக்கு விசேஷ பூஜை நடக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு. வாஸ்து தோஷம் நீங்க இங்கு வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி திதிகளில் சுவாமி, அம்மனை தரிசித்தால் குறை நீங்கி நன்மை உண்டாகும்.

இருப்பிடம்: திண்டுக்கல் - நத்தம் சாலையில் 11 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு. அங்கிருந்து 1 கி.மீ. தூரத்தில் கோவில்.

நேரம்: காலை 7.00 - இரவு 7.00 மணி

அலைபேசி: 95782 11659.






      Dinamalar
      Follow us