ADDED : ஜன 10, 2020 10:34 AM

ஜன.12 விவேகானந்தர் பிறந்தநாள்
* இந்தியனாக இருப்பதைப் பற்றி பெருமைப்படுங்கள். 'நான் ஒரு இந்தியன், ஒவ்வொரு இந்தியனும் என் சகோதரன்' என முழங்கிடுங்கள்.
* உலகில் பொய், திருட்டு, கொலை, பாவச்செயல்கள் இருப்பதற்கு காரணம் மனிதனின் பலவீனமே. இவை இல்லாதவனுக்கு மரணமோ, துன்பமோ ஏற்படாது.
* உயிர் போகும் வரையில் பணியில் ஈடுபடுங்கள். சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் சிக்கி புழு போல இறப்பதை விட, உண்மையை போதித்தபடி களத்தில் உயிர் விடுவது மேல்.
* ஒவ்வொரு மனிதனிடமும் தெய்வீக சக்தி ஒளிந்துள்ளது. அதை வெளிக் கொண்டு வருவதே நம் லட்சியம்.
* முதலில் பண்புள்ளவர்களாவோம். பின்னர் பிறரை பண்புள்ள வராக்கும் முயற்சியில் ஈடுபடுவோம். 'ஆகுக', 'ஆக்குக' என்பது நம் குறிக்கோளாகட்டும்.
* பசியால் வாடுவோரிடம் ஆன்மிகம் பேசுவது அவர்களை அவமதிப்பதாகும். முதலில் உணவிட்ட பின்னர் ஆன்மிகப் பணியை தொடர்வோம்.
* ஆன்மிக பலத்தால் மட்டுமே நம் நாடு எழுச்சி பெறும். கடவுள் நம்பிக்கையால் இந்திய மக்கள் பலம் பெற்றிருக்கிறார்கள். சிங்கம் போல் தைரியம் கொண்டிருக்கிறார்கள்.
* ஆசைக்கு கண்ணில்லை. அது நரகத்தில் தள்ளி விடும். அன்பில் கரைந்து விடுங்கள். அது சொர்க்கத்தில் சேர்த்து விடும்.
* தியாகம் செய்ய தயாராக இருந்தால் மட்டுமே உலகிலுள்ள மற்றவர்களின் இதயங்களை வெல்ல முடியும்.
* நம்மைப் பற்றி எண்ணாத நேரத்தில் மட்டுமே உண்மை யான வாழ்க்கையை நாம் அனுபவிக்கிறோம்.
* பணம், உடல்நலம், சொர்க்கத்திற்காக இல்லாமல் நல்லறிவு பெறுவதற்காக தினமும் பிரார்த்தனை செய்யுங்கள்.
* ஏழைகள் கடவுளின் பிரதி நிதிகள். அவர்களுக்கு கொடுத்து மகிழாமல் சுயநலத் துடன் இருப்பது கூடாது.
முழங்குகிறார் விவேகானந்தர்