/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
ஆத்திரம் கண்ணை மறைக்கும் போது அறிவுக்கு வேலை கொடு!
/
ஆத்திரம் கண்ணை மறைக்கும் போது அறிவுக்கு வேலை கொடு!
ஆத்திரம் கண்ணை மறைக்கும் போது அறிவுக்கு வேலை கொடு!
ஆத்திரம் கண்ணை மறைக்கும் போது அறிவுக்கு வேலை கொடு!
ADDED : பிப் 27, 2018 09:55 AM

* பொறுமைக்கு சமமான பண்பு வேறில்லை. ஆத்திரம் கண்ணை மறைக்கும் போது, அறிவுக்கு வேலை தந்தால் மனம் அமைதியாகி விடும்.
* தியானத்தில் ஒருவன் வெற்றி பெறும் பொழுது, அனைத்திலும் வெற்றி பெறுகிறான்.
* பக்தியை தவிர, வேறு எதையும் கடவுள் எதிர்பார்ப்பதில்லை.
* பிரார்த்தனை செய்யும் வழக்கம் உடையவர்கள் விரைவில் துன்பத்திலிருந்து விடுபடுவர்.
* தியானத்தில் மனம் நிலைத்து விட்டால், யாருடனும் பழகலாம். அதனால் மனதிற்கு ஒரு குறையும் வராது.
* எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில், உங்கள் மனதை மாற்றி கொள்ளுங்கள்.
* பிறரது குற்றத்தை பார்க்க தொடங்கினால், நீயும் குற்றவாளியாகி விடும் சந்தர்ப்பம் வரும்.
* உலக வாழ்க்கையில் எந்த அளவுக்கு பற்று குறைகிறதோ, அந்த அளவுக்கு மன அமைதி கிடைக்கும்.
* மனிதனாக பிறந்ததால் பாக்கியசாலியாகி விட்ட நீங்கள், தர்மம் செய்து வாழ்வை
பயனுள்ளதாக்குங்கள்.
* மனதில் துாய்மை இருந்தால் பார்க்கும் அனைத்தும் சுத்தமானதாக இருக்கும். மனிதனின் எண்ணத்தை பொறுத்தே இது அமைகிறது.
* ஆன்மிகத்தில் சாதிக்க ஏற்றது இளமைக்காலமே. தன்னம்பிக்கை இழக்காமல் மனம் ஒன்றி பிரார்த்தனையில் ஈடுபட்டால் கடவுள் அருளால் எல்லாம் நன்மையாக நடக்கும்.
* ஒரு பொருளை மதித்தால், அந்த பொருளும் உன்னை மதிக்கும். எந்த வேலையையும் துச்சமாக கருதாமல் அதற்குரிய மதிப்பை வழங்கி கற்றுக் கொள்.
* மனதில் அமைதி நிலைக்க விரும்பினால் மற்றவரின் குறைகளை பற்றிச் சிந்திக்காதே.
* உலகிலுள்ள பிரச்னை அனைத்திற்கும் பணமே மூலகாரணம். மனதை சலனப்படுத்தி பாவம் செய்யத் துாண்டுவது பணமே.
* கீழ்நோக்கி ஓடும் நீர் போல, மனம் அற்ப விஷயங்களில் நாட்டம் கொள்கிறது.
* அதை தடுத்து நிறுத்தி, உயர்ந்த விஷயங்களில் ஈடுபடுத்த முயற்சியுங்கள்.
* நம்பிக்கையும், மன உறுதியும் வாழ்வின் அடிப்படை அம்சங்கள். இந்த இரண்டும் இருந்தால், உலகில் எல்லாம் இருந்த மாதிரி தான்.
* உடன் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியளிக்க முடியுமானால், உன் வாழ்வின் லட்சியம் நிறைவேறி விட்டது என்று பொருள்.
* கடவுளை நேசித்தால் வாழ்வில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
* கடவுளை நேசிப்பவனே உலகின் சிறந்த புண்ணியவான்.
சொல்கிறார் சாரதாதேவியார்