sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மழை பெய்வது யாருக்காக?

/

மழை பெய்வது யாருக்காக?

மழை பெய்வது யாருக்காக?

மழை பெய்வது யாருக்காக?


ADDED : மார் 05, 2020 08:15 AM

Google News

ADDED : மார் 05, 2020 08:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்லவர் ஒருவரும் இல்லாத நிலையில் உலகில் மழை பெய்வது நிற்கும்.

* எண்ணம், சொல், செயலால் மனிதன் அடக்கத்தை பழக வேண்டும்.

* கடவுளுக்கு படைத்த பின்னரே தினமும் உணவைச் சாப்பிட வேண்டும்.

* தர்ம வழியில் தேடிய பணத்தில் வேதம் விதித்த கடமைகளைச் செய்ய வேண்டும்.

* எப்போதும் கடவுளின் திருநாமம் சொல்வோருக்கு குறையேதும் ஏற்படாது.

* தர்மம் என்னும் தோணியில் பயணித்தால் வாழ்க்கை என்னும் கடலை எளிதாக கடக்கலாம்.

* பேராசை கொண்டவனுக்கு அறிவு ஒருபோதும் வேலை செய்யாது.

* கோபத்தை குறைத்தால் எல்லா துன்பங்களில் இருந்து விடுபட முடியும்.

* புலன்களின் கவர்ச்சி அறிஞர்களைக் கூடத் தடுமாறச் செய்யும்.

* தர்மத்தில் நம்பிக்கை இல்லாதவனுக்கு வாழ்வில் பிடிப்பு ஏற்படாது.

* வேதத்தின் முடிவு உண்மை. உண்மையின் முடிவு அடக்கம். அடக்கத்தின் முடிவு மோட்சம். இதுவே முடிவான தீர்மானம்.

* கலியுகத்தில் செய்யும் தவம், பிரம்மசரியம், ஜபத்தால் குறுகிய காலத்தில் அதிக பலன் கிடைக்கும்.

* தர்மம் இருக்குமிடத்தில் கடவுள் வாழ்கிறார்.

* சந்தேகம் இன்றி கடவுளைச் சரணடைவது ஒன்றே கல்வியின் பயன்.

சொல்கிறார் வியாசர்






      Dinamalar
      Follow us