
ஏப்ரல் 18 மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்
முதலாழ்வார்களில் பேயாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாரும், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வாரும் ஆகிய ஆறு பேர் அழகர்கோவில் கள்ளழகர் மீது பாசுரம் பாடியுள்ளனர். இவர்கள் பாடிய 123 பாடல்கள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
இவர்களுக்குள் ஒற்றுமை பாருங்க!ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலும், அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயிலும் பல விஷயங்களில் ஒற்றுமை கொண்டதாக திகழ்கிறது. இருகோயில்களும் கோட்டை கொத்தளங்கள் கொண்டவை. நெல் உள்ளிட்ட விளைபொருட்களை காணிக்கையாக செலுத்தும் குதிர்கள் இரண்டு இடங்களிலும் உண்டு. பிரதான வாசலுக்கு 'ஆர்யன்வாசல்' என்று பெயர். மூலவருக்கு படைக்கும் பிரசாதம் தனி நெய்யினால் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு கோயில்களிலும் திருமதில்களைப் பற்றி பாசுரம் நாலாயிரதிவ்ய பிரபந்தத்தில் உள்ளன. பெரியாழ்வாரும் ஆண்டாளும் இருகோயில் பெருமாளிடமும் மிகுந்த பக்தி கொண்டு வாழ்ந்தவர்கள். ஆண்டாள் சூடிய மாலையை ரங்கநாதர், அழகர்கோவில் வந்து ஏற்றுக் கொண்டதாக ஐதீகம்.
இணைந்தது இருவிழாமதுரை மீனாட்சியம்மன் கோயில் பெரிய திருவிழா, மாசி மாதம் தான் நடந்து வந்தது. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் இன்றும் சுவாமி பவனி வரும் வீதி மாசிவீதியாகவே உள்ளது. அழகர்கோவிலில் சுந்தரராஜப்பெருமாளுக்கோ சித்திரையில் விழா நடந்தது. திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்புவரை இவ்விழாக்கள் தனித்தனியாகவே நடந்து வந்தன. சமயப்பூசலை ஒழித்து மக்கள் ஒற்றுமையோடு வாழவேண்டும் என்ற உயர்ந்தநோக்கில் மீனாட்சியம்மன் திருக்கல்யாண வைபவத்தை சித்திரைக்கு மாற்றினார் நாயக்கர். அதுமுதல் மீனாட்சிக்கும், அழகருக்கும் சித்திரை மாதத்தில் திருவிழா நடந்து வருகிறது.