நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆறுபடைவீடுகளில் கடற்கரையோரத்தில் அமைந்தது திருச்செந்துார்.
இங்குள்ள மீனவர்கள் 'மச்சான்' (மாப்பிள்ளை) என முருகனை அழைக்கின்றனர்.
முருகனை மணந்த தெய்வானை தங்களின் குலத்தில் பிறந்தவள் என்றும், அவள் கன்னியாகுமரி பகுதியை ஆண்ட மச்சேந்திரனின் மகள் என்றும், தெய்வானை மீது கொண்ட காதலால் அவளை முருகன் திருமணம் செய்ததாக கூறுகின்றனர். புதிய படகு வாங்கும் போது கோயிலுக்கு நேராக படகை நிறுத்தி பூஜிக்கின்றனர்.