
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரத்தண்டின் இருபுறமும் அபிஷேகத்திற்குரிய பொருளைக் கட்டி, அதை தோளில் சுமந்து வரும் வழிபாடு காவடி. இதில் கட்டப்படும் பொருட்களைப் பொறுத்து பால், பன்னீர், புஷ்பம், இளநீர், வேல், சர்க்கரை, சாம்பிராணி, மச்சக்காவடி, சர்ப்பக்காவடி என்று பலவித காவடிகள் உண்டு. இதில் மச்சக்காவடி, சர்ப்பக்காவடி இரண்டும் நடைமுறையில் இல்லை. இருபுறங்களிலும் மண் சட்டிகளில் மீன்கள் கொண்டு வருவது மச்சக்காவடி.
சர்ப்பக் காவடியில் நல்ல பாம்பு இடம்பெற்றிருக்கும். இவற்றை பக்தர்கள் சுமந்து வந்து முருகன் கோயிலுக்கு அருகிலுள்ள ஆறு, குளக்கரைகளில் உயிருடன் விட்டு விடுவது வழக்கம்.